முக்குலம்


Join the forum, it's quick and easy

முக்குலம்
முக்குலம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

முத்துராமலிங்க சேதுபதி மன்னர்

Go down

முத்துராமலிங்க சேதுபதி மன்னர் Empty முத்துராமலிங்க சேதுபதி மன்னர்

Post  Admin Mon Jul 12, 2010 9:41 am

ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய வீரன் முத்துராமலிங்க சேதுபதியின்
நினைவு அஞ்சல்தலையை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் கருணாநிதி இன்று
தலைமைச்செயலகத்தில் வெளியிட்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியது:வீரம்
செறிந்த நமது தமிழ் மண்ணில், இந்திய சுதந்திரத்திற்காக வித்தூன்றிய,
இலட்சக் கணக்கான தியாகச்சுடர்களில் மறவர் குலத்தின் இறுதி மன்னராக விளங்கிய
முத்து விஜயரகுநாத முத்து ராமலிங்க சேதுபதி மிக
முக்கியமானவர்!இராமநாதபுரம் செல்லமுத்து சேதுபதி மன்னருக்கு சகோதரி மகனாக
30.3.1760இல் இராமநாதபுரம் அரண்மனையில் பிறந்தவர் அவர். அவர் பிறந்த 72 ஆம்
நாளிலேயே அவருக்கு இளவரசுப் பட்டம் சூட்டப்பட்டது.1772 மே திங்களில்
ஆர்க்காடு நவாப் மகன் உம்ரத்துல் உம்ரா ஆங்கிலத் தளபதி ஜோசப் ஸ்மித்
ஆகியோர் இணைந்து இராமநாதபுரம் கோட்டையைத் தாக்கிய போரில் ஆயிரக்- கணக்கான
வீர மறவர்கள் மடிந்தார்கள்.12 வயது சிறுவனாக இருந்த இளவரசரும், அவரது
அன்னையாரும், சகோதரிகளும் திருச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கே சிறை
வைக்கப்பட்டார்கள்.அவர் சிறையிலே இருந்த 10 ஆண்டு காலத்தில் மறவர் சீமையில்
தொடர்ந்து கலவரங்களும், குழப்பங்களும் கொந்தளித்ததால் 1782இல் இளவரசர்
சேதுபதி 22 வயதில் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு, இராமநாதபுரம்
மன்னராகப் பொறுப்பேற்றார்.சேது நாட்டை ஆக்கிரமித்து, தன்னையும், தனது
குடும்பத்தாரையும் பத்தாண்டு காலம் சிறையிலடைத்த ஆர்க்காடு நவாப்பையும்,
ஆங்கிலேயக் கும்பெனியாரையும், பழிவாங்கத் துடித்த இளஞ்சிங்கம் சேதுபதி,
டச்சுக் காரர்களின் உதவியுடன், இராமநாதபுரத்திற்கு அருகிலே இருந்த காட்டுப்
பகுதியில் பெரிய பீரங்கிகள் தயாரிக்கும் ஆயுதச் சாலையைத் தொடங்கினார்;
அதன் மூலம் தனது படைபலத்தையும் பெருக்கினார்.அந்நிலையில் ஆற்காடு நவாபிடம்
இருந்து தென்பாண்டிச் சீமையில் வரி வசூலிக்கும் உரிமை பெற்ற கும்பெனியார்
சேதுபதி மன்னரிடம் ஆதிக்கம் செலுத்த முனைந்தார்கள்.மறவர் சீமை
கைத்தறித்துணிகள் உற்பத்தியில் சிறந்து விளங்கியதால் அங்கு உற்பத்தியாகும்
கைத்தறித் துணிகள் அனைத்தையும் தமக்கே விற்பனை செய்ய வேண்டும் என்று
கும்பெனியார் வைத்த கோரிக்கையை சேதுபதி மன்னர் ஏற்கமறுத்து விட்டார்!
அதேபோலச் சேதுபதிச் சீமையில் தானியங்களை விற்பனை செய்வதில் சுங்கவரி
விதித்தல் கூடாது என்ற கும்பெனியாரின் கோரிக்கையையும் முத்துராமலிங்க
சேதுபதி மறுத்துவிட்டார்!ஆங்கிலேய வணிகக் கப்பல்கள் தூத்துக்குடி
துறைமுகத்திலிருந்து கைத்தறித் துணிகளையும், மிளகு போன்ற பொருள்களையும்
ஏற்றிக் கொண்டு சென்னைத் துறைமுகத்திற்குச் சேதுபதி மன்னருக்கு உரிமையான
பாம்பன் நீர் வழியே செல்லும்போது; அந்தக் கப்பல்களை வரிசையில் நிறுத்தி,
சுங்கச் சோதனை செய்வதையும், அதற்குச் சுங்கவரி விதிப்பதையும் நீக்க
வேண்டுமென்ற வெள்ளைக்காரர்களின் கோரிக்கையையும் நிராகரித்தார்
முத்துராமலிங்க சேதுபதி மன்னர். இப்படி ஆங்கிலேயர் விடுத்த கோரிக்கைகளை
அனைத்தையும் மறுத்த முத்துராமலிங்க சேதுபதி அவர்களை, விசாரணைக்கு வருமாறு
திருநெல்வேலியிலிருந்த கலெக்டர் பவுனி சம்மன் அனுப்பினார்.வாணிகம் செய்து
பிழைக்க வந்தவர்கள் தனக்கு ஆணையிடுவதா எனக் கொதித்த சேதுபதி அந்த ஆணையைப்
புறக்கணித்தார். அடுத்து, சென்னை கோட்டையிலிருந்த கும்பெனி கவர்னர்,
கலெக்டர் அனுப்பும் கடிதப்படி அவர்முன் சென்று ஆஜராகும்படி சேதுபதி
மன்னருக்கு ஆணையிட்டார். அதையும் சேதுபதி மன்னர் பொருட்படுத்தவில்லை. இவை
காரணமாக - எரிச்சலடைந்த ஆங்கிலேயர், அவரை “ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி”
எனக் கோபத்துடன் கூறத்தொடங்கினர். அவரை அடக்கி, மறவர் சீமையை கைப்பற்றத்
திட்டமிட்டர்கள். இத்திட்டப்படி 1795 பிப்ரவரி 8ஆம் நாள், இராமநாதபுரம்
அரண்மனையைக் கும்பெனிப் படை முற்றுகையிட்டு, சேதுபதி மன்னரைக் கைது செய்து
திருச்சியிலும், பின்னர் இங்கே சென்னைக் கோட்டையிலும் சிறையிலடைத்தது.
அங்கேதான் இன்று கூடியிருக்கிறோம், அவருக்கு அஞ்சல் தலையை வெளியிட.அதனைத்
தொடர்ந்து, மறவர் சீமையில் எழுந்த கிளர்ச்சிகளையெல்லாம் அடக்கியது, சேதுபதி
மன்னரை விசாரணை எதுவுமின்றி 13 ஆண்டு காலம் சிறையிலேயே வைத்திருந்தது.
அடங்காத விடுதலை வேட்கையோடு சிறைக் கூடத்தில் அடைபட்டிருந்த நிலையில்,
23.1.1809 அன்று தன்னுடைய 49ஆம் வயதில் சேதுபதி மன்னர் உலக வாழ்வை
நீத்தார். தாயகத்து உரிமையை மதித்து அதனை நிலைநாட்ட முனைந்ததற்காக 49 ஆண்டு
கால வாழ்வில் ஏறத்தாழ சரிபாதி 24 ஆண்டுகளை, அந்நியர் சிறையில் கழித்து
மறைந்த வீரத் தியாகி முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் தீரத்தை -
தியாகத்தைப் போற்றி, அவரது நினைவாக சிறப்பு அஞ்சல் தலை வெளியிட வேண்டுமென
மத்திய அரசுக்கு இந்தத் தமிழக அரசு விடுத்த கோரிக்கை நிறைவேறி - இன்று
அஞ்சல் தலை வெளியிடப்படுகிறது. இதற்கு ஆவன செய்த மத்திய அரசுக்கு தமிழக
அரசின் சார்பில் எனது மனமார்ந்த நன்றி என்று முதலமைச்சர் கூறினார்.

நண்பர் அனுப்பி மெயிலில் இருந்து

Admin
Admin

Posts : 48
Join date : 20/06/2010

https://mukkulam.ace.st

Back to top Go down

முத்துராமலிங்க சேதுபதி மன்னர் Empty Re: முத்துராமலிங்க சேதுபதி மன்னர்

Post  Admin Mon Jul 12, 2010 9:49 am

வீரமும் மானமும் விஞ்சியவர் தமிழ் மறவர். இவர்களது தொன்மையையும்,
வாழ்க்கைச் சிறப்பையும் சங்க இலக்கியங்களான அகநானுhறு , புறநானுhறு,
நற்றினை, பெரும்பாணாற்றுப்படை ஆகியவை ஏற்றிப் போற்றுகின்றன. விழுடககொடை
மறவர், பினைகழல் மறவர், பெருந்தொடை மறவர் என்பன அந்த
இலக்கியங்கள்மறவர்களுக்குச் சூட்டியுள்ள புகழாரங்கள்.
எதிரி எமனாக இருந்தாலும் அவனை அழித்து ஒழிப்பவர் மறவர் என, பகை என கூற்றம்
வரினும் தொலையான் என்பது மறவர்களுக்குக் கூலித் தொகை கூறும்
கட்டியமகும். பத்தாம் நுhற்றாண்டில் சோழர்கள் பெரும் நிலை எய்துவதற்கும்,
பதின்மூன்றாம் நுhற்றாண்டில் பிற்காலப் பேரரசர்களாகப் பாண்டியர் பெருமிதம்
கொள்வதற்கும் அரசப்படையாக நின்று உதவியவர்கள் இந்த மறவர்கள். இவர்கள்
மிகுதியாகவும் தொகுதியாகவும் வாழ்ந்த நாடு (இன்றைய இராமநாதபுரம்,
சிவகங்கைச் சீமைகள்) மறவர் சீமை என வாலாற்றில் குறிக்கப்படுகிறது.
இவர்களது மூத்தகுடிமகனான மறவர் சீமை மன்னர், ” புனித சேது காவலன்” என
வழங்கப்பட்டார். கி.பி. பதினைந்தாம் நுhற்றாண்டு முதல் தமிழ்மொழிக்கும்,
ஆன்மீக வளர்ச்சிக்கும் அவர்கள் அளித்துள்ள மகத்தான பங்கு காலத்தால் மறைக்க
முடியாதது. அவர்களது வீரம், கொடை, புலமை ஆகியவற்றைப் போற்றும் இலக்கியப்
படைப்புகளும் தனிப் பாடல்களும் ஏராளம். அவர்களிடமிருந்து முத்தமிழ்
புலவர்களும், கலைஞர்களும் பெற்ற ஊர்களும், மான்யங்களும் இன்னும்
மிகுதியானவை.
இத்தகைய புகழுக்குரிய வரலாற்று நாயகர்களான சேதுமன்னர்கள் இந்திய நாட்டு
விடுதலை வேள்வியிலும் தங்களது முத்திரையைப் பதித்துச் சென்று இருப்பது
நம்மையெல்லாம் வியக்க வைக்கின்றது.
இன்றைக்கு இருநுhற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக வரலாற்றைத்
தடம்புரளச் செய்தது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி என்ற வணிக நிறுவனம்.
அப்பொழுது இந்திய nhரரசாக விளங்கிய ஜஹாங்கீரின் அனுமதி பெற்ற
இந்நிறுவனத்தினர் குஜராத்திலும், வங்காளத்திலும் தங்களது பண்டகசாலைகளை
அமைத்து வாணிபத்தில் ஈடுபட்டனர். பின்னர் மசூலிப்பட்டிணத்திலும்,
சென்னையிலும் தங்களது நிலைகளை வலுவுடையதாக்கிக் கொண்டனர். அடுத்து,
வாணிகத்திற்குப் புறம்பாக உள்நாட்டு பூசல்களிலும் தலையிட்டுத் தங்களுக்குப்
பயனளிக்கும் கட்சிக்காரர்களை முழுக்க முழுக்க ஆதரிப்பவர்களாக விளங்கி
வந்தனர்.
ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு மேலாக, அதாவது மதுரை நாயக்க மன்னரது
மறைவிற்குப்பிறகு கப்பத்தொகையினை யாருக்கும் கொடுக்காமல் சுயாதீனமாக இயங்கி
வந்த தென்னகப் பாளையக்காரர்கள் நவாப்முகம்மதுஅலிக்குக் கப்பத்தொகை
கொடுக்க மறுத்தனர். அவர்களை அடக்கி ஒடுக்கி அவர்களிடமிருந்து கப்பம்
பெறுவதற்குப் பரங்கியரது கூலிப்படை நவாப்பிற்கு உதவியது. இந்த வகையில்
நவாப் முகம்மது அலி, கும்பெனியாருக்குக் கொடுக்க வேண்டிய கடன் தொகை கூடிக்
கொண்டே சென்றது. பாளையக்காரக்களைத் தவிர , அப்பொழுது தென்னகத்தில்
திருவாங்கூர், தஞ்சாவூர், இராமநாதபுரம், சிவகங்கை புதுக்கோட்டை ஆகிய
பரம்பரைத் தன்னரசுகளும் இயங்கி வந்தன. இவர்களிடமிருந்தும் கப்பம் பெறும்
உரிமை தமக்கு உள்ளது என வலியுறுத்திய நவாப், கும்பெனியாரது படைபலத்தைக்
கொண்டு திருவாங்கூர், தஞ்சாவூர், மன்னர்களை இணங்க வைத்தார். புதுக்கோட்டை
மன்னர், நவாப்பிற்கும், கும்பெனியாருக்கும் பலவிதத் தொண்டுகளைச் செய்து
வந்ததால் அவரிடம் மட்டும் கப்பம் கேட்டு நிர்பந்திக்கவில்லை.
ஆனால் மதுரை நாயக்க மன்னர்களுக்கே திறை செலுத்தாமல் தன்னரசாக இருந்து வந்த
மறவர் சீமை மன்னர்களை என்ன செய்வது ? அவர்களுக்குத் திறை செலுத்த ஆணை
பிறப்பித்துத் தவணை கொடுத்துப் பணம் செலுத்தக் காத்திருப்பதில் எந்தப்
பலனும் இல்லை என நவாப் முகம்மது அலி முடிவிற்கு வந்தார்.

Admin
Admin

Posts : 48
Join date : 20/06/2010

https://mukkulam.ace.st

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum