முக்குலம்


Join the forum, it's quick and easy

முக்குலம்
முக்குலம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Thirumangai mannan

Go down

Thirumangai mannan Empty Thirumangai mannan

Post  Admin Mon Jul 05, 2010 7:06 pm

பௌர்ணமி தினம் என்றாலே அது ஒரு பண்டிகை நாள் தானே. அதுவும் கோடை காலத்தில் வரும் பௌர்ணமியை ஒட்டி பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றது. பங்குனி மாதம் வரும் பௌர்ணமி உத்திர நட்சத்திரத்துடன் இனைந்து வரும். இந்த பங்குனி உத்திரம் கல்யாண விரத நாள். ஆண்டாள்-ரங்க மன்னார், சீதா-இராமர் ஆகியோர் திருக்கல்யாணங்களும் பங்குனி உத்திரத்தன்று நடைபெற்றது. எனவே ,அன்று அனேகமாக எல்லா பெருமாள் கோவில்களிலும் திருக்கல்யாணம் அல்லது சேர்த்தி சேவை பங்குனி உத்திரத்தன்று நடைபெறுகின்றது.

மயர்வற மதிநலம் பெற்ற ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களுள் சோழ மண்டலத்தில் உள்ள திருவாலி- திருநகரி திவ்ய தேசத்தில் நடைபெறும் திருக்கல்யாணம் மிகவும் தனித்தனமை பெற்றது, இங்கு பெருமாள் கள்வனாக இருக்கும் தன்னுடைய கலியனை ஆட்கொள்ள, திருமந்திர உபதேசம் கொடுக்க இங்கு மணக்கோலம் கொள்கின்றார் இவ்விழா திருவாலி-திருநகரியில் 10 நாள் உற்ச்வமாக வேடுபறி உற்சவம் என்று ஆயிரம் தீவட்டிக்கள் ஒளிர நடைபெறுகின்றது இவ்விழாவின் தாத்பரியத்தையும் மேன்மையும் காண தங்களை கைகூப்பி அழைக்கின்றேன் வாருங்கள் என்னுடன்.


சௌரிராஜர் திருக்கோலத்தில் ஆழ்வார்
வேதத்தின் சாரத்தை பகதர்கள் அனைவருக்கும் புரியும் படி அமுதத் தமிழில் அளிப்பீர் என்ற, அஞ்சன வண்ணன், ஆயர் பெருமான், அடியவர்க்கு மெய்யன், அமரற்கரிய ஆதி பிரான், உம்பர் கோன், எம்பெருமானின் ஆனைப்படி, நீளாதேவி, பஞ்சாயுதங்கள், ஸ்ரீவத்ஸம், கௌஸ்துபம், வனமாலி, அனந்தன், கருடன், மற்றும் விஷ்வசேனர் பன்னிருவரும், கலியுகத்தில் பூமியில் தோன்றி பரந்தாமனின் கல்யாண குண வைபவம் என்னும் கடலை மேகங்களாக்கி அந்த அருள் மேகத்தை பக்தி மழையாக நமக்கு பொழிந்து நமது நெஞ்சங்களிலெல்லாம் பேரானந்தம் பொங்க செய்தார்கள். எம்பெருமானின் பக்தியில் ஆழ்ந்து இருந்ததால் இவர்கள் ஆழ்வார்கள் எனப்பட்டனர்.

ஜீவன் பக்தியால் பரமாத்மாவை நெருங்கி, பக்தி பெருக்கினால் தன்னிலும் மேலான பகவானை வாழ்த்துகின்றான் இதுவே மங்களாசாசனம், இவ்வாறு மயர்வற மதி நலம் அருளிய தேவாதி தேவனை மங்களாசாசனம் செய்தவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் வேதாந்த தத்துவத்தையும், பகவத் கீதையின் உபதேச மொழிகளையும் திவ்ய பிரபந்தங்களின் மூலம் தேனினும் இனிய தமிழ் மொழியில் போதித்த பரமனடியார்கள். இவர்களில் கடைக்குட்டியான திருமங்கை ஆழ்வாருக்கு மற்ற ஆழ்வார்கள் எல்லாருக்கும் இல்லாத ஒரு சிறப்பு உண்டு அதுதான் எம்பெருமானிடமே திருமந்திர உபதேசம் பெற்றது. இந்தவைபவம் தான் வேடுபறி உற்சவமாக திருவாலி-திருநகரியில் பங்குனிஉத்திரத்தின் போது கொண்டாடப்படுகின்றது.

முதலில் இத்திவ்ய தேசத்தின் மாண்பைப் பற்றி ஒரு சிறு அறிமுகம். திருவாலி - திருநகரி இரண்டும் 5 கி.மீ இடைவெளியில் உள்ள திருத்தலங்கள், திருநகரியில் சேவை சாதிக்கும் வயலாளி மணவாளனை "திருவாலி நகராளா" என்று திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளதால் இரு தலங்களும் ஒரே திவ்ய தேசமாக கொள்ளப்படுகின்றது. திருமங்கை நாடு, ஆலி நாடு என்றெல்லாம் அழைக்கப்படும் இத்திவ்ய தேசத்தை 41 பாசுரங்களினால் மங்களாசாசனம் செய்துள்ளார் திருமங்கை ஆழ்வார். தேரோடும் நெடுவீதி திருவாலி நகர், சீராரும் வளர் பொழில் சூழ் திருவாலி, எங்கும் ஆலைப்புகை கமழும் அணியாலி , என்று குறிப்பிடுகின்றார் ஆழ்வார் இத்திருத்தலத்தை, தன் பாசுரங்களில். வயலாலி மணவாளனை, அணியாலியம்மான், திருவாலியம்மான் - மண்ணளந்த தாளாளா! தண் குடந்தைகுடமாடீ! வரையெடுத்த தோளாளா! பாரளந்த பண்பாளா! மரமெய்த திரளாளா! என்று மங்களாசாசனம் செய்துள்ளார். தம்முடைய கண்ணபுர பாசுரத்தில் “ ஆலிநகருக்கு அதிபதி “ என்று சௌரி ராஜப் பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார் குலசேகர ஆழ்வார்.

வயலாளி மணவாளன்
திருவாலியில்
மூலவர்: இலஷ்மி நரசிம்மர், வயலாளி மணவாளன்,
உற்சவர்: திருவாலி நகராளன்.
தாயார் : அம்ருத கடவல்லி.
மூலவர் வலப்பக்கத்தில் மஹாலஷ்மித் தாயாரை அணைத்த நிலையில் கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஹிரண்யனை கொன்ற பின்னும் கோபம் அடங்காமல் பெருமான் இருந்த போது தேவர்களும் முனிவர்களும் வேண்டிட பெரிய பிராட்டியார் வந்து பெருமாளின் வலது தொடையில் அமர, அவரை அனைத்து சாந்தமடைந்ததாக ஐதீகம். ஆலிங்கன கோலத்தில் சேவை சாதிப்பதால் இத்தலம்திருவாலி ஆயிற்று. தாயார் அனேகமாக எல்லாத் தலங்களிலும் பெருமாளின் இடது தொடையில் அமர்ந்தவாறு தான் சேவை சாதிப்பது வழக்கம் ஆனால் இத்தலத்தில் வலப்பக்கம் இருப்பது ஒரு தனி சிறப்பு. பூர்ண முனிவரின் மகளாக லஷ்மி பிறந்து வளர்ந்து வரும் போது பெருமாள் அவரை திருவாலியில் மணந்து திருநகரி செல்லும் போது தான் திருமணங்கொல்லையில் கலியன் வாளால் வெருட்டி திருமந்திர உபதேசம் பெற்றதாக ஐதீகம். இத்தலம் பில்வாரண்யம் என்று அறியப்படுகின்றது.
இத்தலம் பஞ்ச நரசிம்ம ஷேத்திரமும் ஆகும். திருமங்கையாழ்வாரின் அவதார ஸ்தலமான திருக்குறையலூரில் ஸ்ரீ உக்ர நரசிம்மர், ஆழ்வார் ஒரு வருடம் முழுவதும் 1008 வைணவர்களுக்கு ததியாராதனம் நடத்திய திருமங்கைமடத்தில் ஸ்ரீ வீர நரசிம்மர், திருநகரியில் ஆழ்வார் ஆராதித்த ஸ்ரீயோக நரசிம்மர், மற்றும் ஸ்ரீ ஹிரண்ய நரசிம்மர் என்று ஐந்து கோலங்களில் சேவை சாதிக்கின்றார். சிவபெருமான் அசுரர்களுக்கு பல் வேறு வரங்களை அளித்ததால் அவர்கள் செய்த பாவங்கள் சிவபெருமானை பற்றிக் கொள்கின்றன, அவை தீர சிவபெருமான் தனது ஐந்து முகங்களால் ஸ்ரீநரசிம்மரை துதிக்க பெருமாளும் ஐந்து கோலத்தில் சேவை சாதித்து சிவபெருமானின் பாவங்களை அழித்ததாக ஐதீகம்.
திருநகரி தலம் ஸ்ரீபுரி, லஷ்மிபுரம், ஆலிங்கனபுரம், விக்னேஸ்வரநல்லு‘ர் என்றும்வழங்கப்படுகின்றது. இத்தலத்தைப்பற்றிய குறிப்புகள் கருட புராணத்தில் உள்ளன.
மூலவர் ஸ்ரீ தேவி, பூமா தேவி சமேத வேதராஜன்,
உற்சவர் கல்யாண ரங்கனாதர்.
தாயார் : அம்ருத வல்லி.
மூலவர் அமர்ந்த கோலத்தில் மேற்கு நோக்கி சேவை சாதிக்கின்றார். வயலாளி மணவாளன் என்றும் அழைக்கப்படுகின்றார். திருமால் திருமகளை மூவுலகமும் தேடி காணாமல் இறுதியாக இத்தலத்தில் புஷ்கரணியில் தாமரை மலரில் தாயாரைக்கண்டு ஆனந்தம் அடைந்து ஆலிங்கனம் செய்ததால் இத்தலம் ஆலிங்கனபுரம் ஆயிற்று. திருமகள் வந்து தங்கியதால் ஸ்ரீ - மஹா லஷ்மி, புரி - நகர் என்று தமிழில் திருநகரி ஆயிற்று.

திருமங்கையாழ்வாரின் சந்நிதி இத்தலத்தில்தான் உள்ளது. வேலனைத்த மார்பும் விளங்கு திருவெட்டெழுத்தைமாலுரைக்க தாழ்த்த வலசெவியும்,தாளினைத் தண்டையும் விளங்க, குமுதவல்லி நாச்சியாருடனும், ஆழ்வார் ஆராதித்த சிந்தனைக்கினியானுடனும் கள்ளர் கோலத்தில் சேவை சாதிக்கின்றார் 60 மேற்பட்ட திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்த, மாலிடமே மந்திர உபதேசம் பெற்ற திருமங்கையாழ்வார். திருமங்கையாழ்வாரின் வடிவழகிலீடுபட்டு மணவாளமாமுனிகள் அருளிய வடிவழகு சூர்ணிகை இவ்வாறு வர்ணிக்கின்றது


அணைத்த வேலும், தொழுத கையும், அழுந்திய திருநாமமும்,
ஓம் என்ற வாயும், உயர்ந்த மூக்கும், குளிர்ந்த முகமும்,
பரந்த விழியும், பதித்த நெற்றியும், நெறித்த புருவமும்
சுருண்ட குழலும், வடிந்த காதும் அசைந்த காது காப்பும்,
தாழ்ந்த செவியும், சரிந்த கழுத்தும், அகன்ற மார்பும்,
திரண்ட தோளும் நெளித்த முதுகும், குவிந்த இடையும்,
அல்லிக்கயிறும், அழுந்திய சீராவும், தூக்கிய கருங்கோவையும்
தொங்கலும் தனி மாலையும், தளிருமிளிருமாய் நிற்கிற நிலையும்
சாற்றிய திருத்தண்டையும், சதிரான வீரக்கழலும்,
தஞ்சமான தாளினையும், குந்தியிட்ட கனைக்காலும்,
குளிர வைத்த திருவடி மலரும், வாய்த்த மணங்கொல்லையும்,
வயலாளி மணவாளனும், வாடினேன் வாடி (என்று)
வாழ்வித்தருளிய , நீலிக்கலிகன்றி, மருவலர்தம் உடல் துணிய
வாள் வீசும் பரகாலன், மங்கை மன்னனான வடிவே.

திருவாலி - திருநகரி திவ்ய தேசத்தின் மாண்புகளுக்குப்பின் திருமங்கையாழ்வாரின் வைபவம் சிறிது காண்போமா? திருமாலின் வில்லான சார்ங்கத்தின் அம்சமாக சோழ வள நாட்டில் திருமங்கையென்னும் பகுதியில் திருவாலி திருப்பதியினருகே திருக்குறையலு‘ரில் கள்ளக்குடியில் பூர்ணிமை வியாழக்கிழமை, கிருத்திகை இவைகள் பொருந்திய நாளில் கார்த்திகை திங்களில் சோழ அரசனின் சேனை தலைவர் இல்லத்தில் அவதரித்தார். இவருக்கு பெற்றோர் இட்டபெயர் நீலன். குடிப்பிறப்பிற்கேற்ப்ப போர்த்தேர்ச்சி பெற்று அரசனுக்காக பல போர்களில் வென்று திருமங்கை நாட்டின் மன்னனாக பகைவர்களை வெல்லுவதில் வல்லவரானதால் பரகாலன் என்ற திருநாமத்துடன் முடி சூடப்பட்டார். சிற்றரசன் என்ற முறையில் சோழவரசனுக்கு கப்பம் செலுத்தி வந்தார்.
பூலோக மாயையில் உழன்று கொண்டிருக்கும் தன் அன்பனை திருத்திப் பணிகொள்ள விரும்பிய பெருமாள் தேவலோகத்திலிருந்து பூவுலகில் கண்ணார் கடல் போல் திருமேனிக்கரிய அண்ணனாய் எம்பெருமான் சேவை சாதிக்கும் திருவெள்ளைக்குளத்தில் நீராடவந்தப் பெண்னை மானிட உருக்கொண்டு இங்கேயே தங்க வைத்தார். குமுத மலர் பறித்து நின்ற அப்பெண்னை அவ்வழி வந்த ஒரு வைணவ மருத்துவன் கண்டு குமுதவல்லி என்னும் பெயரிட்டு வளர்த்து வந்தான். ஒற்றர்கள் மூலம் குமுதவல்லியின் அழகைப்பற்றி அறிந்த மங்கை மன்னன் வைத்தியனிடம் சென்று குமுதவல்லியை தனக்கு மணம் முடித்துத் தருமாறு வேண்டினார்.

குமுதவல்லியோ திருமணத்திற்க்கு நிபந்தனை விதித்தாள். சங்கு சக்கர இலச்சினை பொறித்தல், திருமண்காப்பு தரித்தல், தாஸ்ய நாமம் பெறுதல் , திருவாராதனை செய்தல், திருமந்திரம் பெறுதல் , என்னும் ஐவகை சிறப்புடைய வைணவருக்கேயன்றி வேறொருவருக்கு துணையாகேன் என்று மறுத்து விட்டாள். பரகாலனும் திருநறையூர் சென்று அவ்வூரில் கோவில் கொண்டுள்ள நம்பியிடமிருந்து திருவாழி திருச்சங்கிலச்சினை பெற்றும், திருகண்ணபுரத்தம்மானிடம் திருமந்திரோபதேசம் பெற்றும் பன்னிரு திருமண்காப்புகளணிந்து குமுதவல்லியிடம் மீண்டும் சென்று மணம் புரிய வேண்டினார் .
பன்னிரு திருமண்காப்புகளுடன் திருமங்கை ஆழ்வார்
அப்போது ஆயிரத்தெட்டு திருவைட்டணவர்களுக்கு நாடோறும் ஓராண்டு காலம் அமுது செய்வித்து அவர்கள் போனகம் செய்த சேடத்தையும், அவர்கள் திருவடிகளை விளக்கிய நீரையுமுட்கொண்டால் தான் மங்கை மன்னனை மணம் புரிய இசைவதாக குமுதவல்லி பணித்தாள். மங்கையாசையினால் ஆலி நாடனும் அதற்கிசைந்து வாக்களிக்க திருமணம் நிறைவேறியது. மங்கை மடத்தில் “ததியாராதனையை “ தொடங்கினார் மங்கை மன்னர். இதற்காக மிகவும் பொருள் வேண்டியிருந்தமையால் அரசனுக்கு சரியாக கப்பம் கட்டமுடியாமல் போயிற்று, அரசனிடமிருந்து வந்த ஏவலாலர்களை ஆழ்வார் விரட்டியடிக்க அவரை சிறைப்பிடிக்க, அரசனின் சேனைத் தலைவன் வந்தான், "ஆடல்மா" என்ற தன்னுடைய பஞ்ச கல்யாணிக்குதிரையின் மீதேறி பொருது அவனை புறமுதுகிட்டு ஓடச்செய்தபின், அரசனே போருக்கு வந்தான். வஞ்சத்தினால் அரசன் ஆலி நாடனை அருகிலழைத்து அமைச்சனிடம் ஒப்புவித்து கப்பப் பணம் தந்தால் விடுவிப்பதாக கூறிச் சென்றான். திருக்கச்சியம்பதி பேரருளானன் மங்கை மன்னன் கனவில் தோன்றி வேகவதி ஆற்றங்கரையில் பொருள் கிட்டும் என்று கூற, இவரும் அமைச்சனிடம் கூறி அவனுடன் காஞ்சி சென்று இறையருளால் வேகவதியாற்றங்கரையில் புதையுண்ட நிதி காட்டப்பட்டு நிதியையெடுத்து அரசனுக்கு கப்பமாக செலுத்தினார். அரசனும் உண்மையறிந்து கப்பப் பணத்தை திருப்பியளித்து அடியார்களின் பூசனைக்கு உதவினான்.


வெண்ணெய்த் தாழி கிருஷ்ணர் திருக்கோலத்தில் ஆழ்வார்
மேலும் பொருள் வேண்டியிருந்ததால் தன் தோழர்களான நீர் மேல் நடப்பான், நிழலிலொதுங்குவான், தாளூதுவான், தோலாவழக்கன் என்ற நால்வரின் துணையோடு வழிப்பறி செய்து அடியார்களுக்கு ததியாராதனம் செய்ய முற்பட்டார். இவரை ஆட்கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டதால் எம்பெருமான் பிரசன்ன வதனத்துடன், கமல நயனங்களுடன், பவழம் போன்ற சிவந்த செவ்வாயில் குமிண் சிரிப்புடன், வலம்புரி சங்கு போல் மிளிரும் கண்டத்துடன், நிர்மலமான பீதாம்பரங்களுடன், திவ்ய மங்கள ஆபரணங்களை பூண்டு பெரிய பிராட்டியாருடன் தன் தாமரைப் பாதங்களில் வீரக்கழல்களுடன் புது மணக் கோலத்தில் நடந்து வந்தார். அப்போது "திருமணங்கொல்லை" என்னும் இடத்தில் நாட்டியம் ஆட வல்லதான தனது " ஆடல்மா " என்னும் பஞ்சகல்யாணிக் குதிரையிலே வந்த மங்கை மன்னன் அவரை வாள் கொண்டு வெருட்டி நகைகளையெல்லாம் கழற்ற சொன்னார்.
நம் கலியன்
பெருமாளும் பயந்தவர் போல் தனது நகைகள் மற்றும் தாயாரின் ந்கைகளையும் கழற்றிக் கொடுக்க அதை ஒரு மூட்டையாக கட்டுகிறார் நீலன். மணமகனின் காலில் இன்னும் மெட்டி இருப்பதைக் கண்டு அதை கழற்ற முடியாததால் பல்லால் கடித்து கழற்ற முயன்ற போது மண்மகன் நீ கலியன் என்றார். பின்னர் பரகாலன் நகை மூட்டையை தூக்க முயல அதை அவரால் தூக்க முடியவில்லை மிகவும் வெகுண்டு வாள் வீசி ஏய் என்ன மந்திரம் போட்டாய்? என்று வெருட்டஎம்பெருமானும் மந்தகாச புன் சிரிப்புடன் மந்திரம் தரத்தானே நான் வந்தேன் என்று
"ஓம் நமோ நாராயணா"
என்ற திருமந்திரத்தை, உண்மைப் பொருளை அவருக்கு உபதேசித்து அவரின் பூலோகக் கடைமையை உணர்த்தி மன்னனை திருத்தி ஆழ்வாராக்கினார். மந்திரத்தின் சக்தியாலும் எம்பெருமானின் பாதங்களில் அவர் முகம் பட்டதாலும், எம்பெருமானின் தரிசனம் பெற்றதாலும் மெய்ப்பொருளுணர்ந்த பரகாலர்
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந்துயரிடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு
அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்
உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
நாடினேன் நாடிக் கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும் நாமம்
என்று பாசுரங்கள் பாடத் தொடங்கி வடமொழி வேதங்கள் நான்குக்கொப்பான நம்மாழ்வாரின் அருளிச் செயல்களுக்கு ஆறு அங்கங்கள் போன்று பெரிய திருமொழி, திருகுறுந்தாண்டகம், திடுநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் என்னும் ஆறு திவ்விய நூல்களை அருளி திருமங்கையாழ்வார் என்ற திருநாமம் பெற்றார்.

இவற்றுள் பெரியதிருமொழியைப் பாடும் போது எம்பெருமான் எழுந்தருளியுள்ள திருப்பதிகளுக்கு தானே சென்று நேரில் வணங்கி திருப்பிருதி முதலாக திருக்கோட்டியூரீறாக அறுபது திருப்பதிகளை ஆழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்று நான்கு கவிகளிலும் வல்லவராக விளங்கியதால் "நாலு கவிப் பெருமாள்" என்ற பட்டம் பெற்றார். சிறிய திருமடலிலே நாராண நாமத்தையும், பெரிய திருமடலில் கண்ணன் என்ற நாமத்தையும் எதுகை பயில்கிறார் ஆழ்வார், எம்பெருமானின் திவ்ய தேசங்களையும் பட்டியலிடுகிறார். இனி அஷ்டாக்ஷரம் என்னும் திருவெட்டெழுத்தின் பெருமை " ஓம் நமோ நாராயணா" என்னும் இத்திருமந்திரத்தின் பெருமையை இவ்வாறு பெரிய திருமொழியிலே குறிப்பிடுகின்றார்
குலம்தரும் செல்வம் தந்திடும்
அடியார் படுதுயராயினவெல்லாம்
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும்
அருளொடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றுந்தந்திடும்
பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலந்தருஞ் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும் நாமம்.
இறைவனுக்கு அடிமை நிலை (சேஷத்துவம்) என்ற ஞானமாகிய குலத்தையும், தொண்டு (கைங்கர்யம்) ஆகிய செல்வம் தரும் தொண்டர்களின் துன்பங்களையெல்லாம் தரை மட்டமாக்கும், பரமபதமளிக்கும், பேரானந்தத்தில் திளைக்க வைக்கும், தன் முனைப்பு நீங்கும் வலிமை தரும் பிற நன்மைகளையும் தரும் அந்த திருமந்திரம் என்று நாம் எல்லோரும் உய்ய பாடியருளியுள்ளார் திருமங்கையாழ்வார்.

இந்த திருமந்திர உபதேச உற்சவமே பங்குனி உற்சவ பத்து நாள் பிரம்மோற்சவமாக திருநகரியிலே கொண்டாடப்படுகின்றது. பத்து நாளும் வெவ்வேறு கோலங்களில் சேவை சாதிக்கின்றார் ஆழ்வார். அவற்றுள் சௌரிராஜர் திருக்கோலத்தையும், வெண்ணைத் தாழி கிருஷ்ணர் திருக்கோலத்தையும் நீங்கள் இங்கு காண்கின்றீர்கள். இந்த உற்சவத்தில் ஐந்தாவது உற்சவ நாளன்று, வயலாளி மணவாளனுடன் திருவாலிக்கு தனித் தனி பல்லக்குகளில் செல்கிறார் ஆழ்வார். மன்னன் என்ற முறையில் இவர் முன்னிலையில் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெறுகின்றது. பின் ஆழ்வாருடன் திருநகரிக்கு திரும்புகிறார் பெருமாள்.
எட்டாம் உற்சவ நாள் அதாவது பங்குனி உத்திரத்திற்கு முதல் நாள்
இதுவோ! திருவரசு? இதிவோ! திருமணங்கொல்லை
இதுவோ! எழிலாலி என்னுமூர்
இதுவோ தான் வெட்டும் கலியன் வெருட்டி நெடுமாலை
எட்டெழுத்தும் பறித்தவிடம்.

ஆடல்மாவிலே மங்கை மன்னர் முன்னழகு
என்னும் திருமணங்கொல்லையிலே காலையிலே சர்வாபரண பூஷ’தராக கல்யாண ரங்கனாதர் சென்று திருக்கல்யாணம் நடைபெறுகின்றது. இரவு ஏழு மணி அளவில் ஆலி நாடன், அருள்மாரி, அரட்டமுக்கி, அடையார்சீயம், கொங்குமலர்க் குழலியர்வேள், மங்கை வேந்தன், கொற்றவேல் பரகாலன், கலியன், ஆடல்மாவலவன், கலிகன்றி, குமுதவல்லி மணாளன் என்றெல்லாம் அழைக்கப்படும் திருமங்கையாழ்வார் தனது ஆடல்மா என்னும் தங்கக் குதிரை வாகனத்திலே ஈட்டி கையில் ஏந்தி ஆழ்வார் ஆயிரக்கணக்கான வைணவர்கள் தீவட்டி ஏந்தி வர புறப்படுகின்றார். எதிரே திவ்ய அலங்காரத்தில் உடல் முழுவதும் நகைகளுடன் எம்பெருமான் திருக்கல்யாணக் கோலத்தில் எம்பெருமான் வருகிறார்.
வேதராஜபுரம் அருகே வரும் போது நள்ளிரவு தன் தூதுவர் மூலம் செய்தியறிந்த மங்கை மன்னன் வாள் வலியால் எம்பெருமானை வெருட்ட மணமகனும் பயந்தது போல் தனது மற்றும் புது மனைவி€யின் நகைகளையெல்லாம் கழற்றிக் கொடுக்க அவர் அதை ஒரு மூட்டையாக கட்டி கீழே வைத்து விட்டு நிமிரும் போது மணமகனின் காலில் உள்ள மெட்டி கண்ணில் பட்டது, அதையும் கழற்றிக் கொடு என்று வெருட்ட மணமகனும் கழற்ற முடியவில்லை நீயே கழற்றிக் கொள் என்று கூற கையினால் கழற்ற முடியாமல் தனது பல்லினால் கழற்ற முயன்றார் என்வே மணமகனான பெருமான் இவரை கலியன் என்று பெயரிட்டார். பின் நகைக€ள் கட்டிய மூட்டையை தூக்க முயன்ற போது அவரால் அதை அசைக்கக் கூட முடியவில்லை. கோபம் கொண்ட அவர் ஏய்! என்ன மந்திரம் போட்டாய் ? என்று வாளை வீசி வெருட்ட எம்பெருமானும் குனிந்து அவர் காதில் நாம் எல்லாம் உய்ய அஷ்டாக்ஷர மந்திரத்தை அவருக்கு அருள அதை மடியொடுக்கி, மனமடக்கி வாய் புதைத்து ஏற்றார். மன்னராக இருந்து ஆழ்வாராக மாறினார். இந்த மந்திர உபதேச நிகழ்ச்சி ஆயிரம் தீவட்டி வெளிச்சத்தில் நடைபெறுவது கண்ணுக்கு விருந்தாக அமைகின்றது. அதை சொற்களால் வர்ணிக்க அந்த ஆயிரம் நாவுகள் கொண்ட அனந்தனுக்கே முடியும். திருமந்திர உபதேசம் பெற்றவுடன் வைணவர்கள் அனைவரும் வாடினேன் வாடி வருந்தினேன் என்ற பாசுரம் தொடங்கி ஆழ்வாரின் அனைத்து பாசுரங்களையும் பாடிக்கொண்டே வருகின்றனர், திருநகரி வந்தடையும் போது அதிகாலையாகிவிடும். இது வேடுபறி உற்சவம். மற்ற திருத்தலங்களில் பெருமாள் குதிரை வாகனத்தில் சேவை சாதிக்கும் போது வேடுபறி உற்சவம் நடைபெறும் இங்கோ ஆழ்வார் குதிரை வாகனத்திலே வருகின்றார்.

ஆடல்மாவிலே மங்கை மன்னர் பின்னழகு
பங்குனி உத்திரத்தன்று ( 9- நாள் உற்சவத்தன்று ) ஆழ்வாரும் வயலாளி மணவாளனும் இரண்டு தனித்தனித் தேர்களில் வீதி புறப்பாடு கண்டருளுகின்றனர். பிறகு தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் சிறப்பாக முடிவடைகின்றது.

என்ன கிளம்பிவிட்டீர்களா? திருநகரிக்கு எம்பெருமானும் பெரிய பிராட்டியும் நடந்து வந்த புண்ணிய பூமியில் ஆயிரம் தீவட்டி ஒளியில் ஆழ்வார் திருமந்திரோபதேசம் பெறும் அழகைக் காண? சென்று வந்து எம்பெருமானின் அருளுக்கு பாத்திரமடைவீர்களாக.


Last edited by Admin on Mon Jul 05, 2010 7:07 pm; edited 1 time in total (Reason for editing : COLOUR)

Admin
Admin

Posts : 48
Join date : 20/06/2010

https://mukkulam.ace.st

Back to top Go down

Thirumangai mannan Empty Re: Thirumangai mannan

Post  Admin Thu Jul 08, 2010 8:31 am

காவிரி நதி பாய்ந்து வளப்படுத்தும் பூமி சோழ வள நாடு. அந்த நாட்டின் பல
உட்பிரிவுகளில் திருவாலி நாடு என்பதும் ஒன்று. அந்நாடு தன்னகத்தே பல
ஊர்களைக் கொண்டது. அவ்வூர்களுள் சிறப்புற்றுத் திகழ்வது திருக்குறையலூர்
என்ற ஊர். இந்தத் திருக்குறையலூரில் நான்காம் வர்ணத்தில்
ஆலிநாடுடையார்க்கும் அவருடைய மனைவி வல்லித்திரு அம்மைக்கும், (கி.பி. 8-ம்
நூற்றாண்டு) அவதரித்தார் திருமங்கையாழ்வார்.
ஆலிநாடர் சோழனின் படைத் தலைவராக இருந்தார். வீரமும் அன்பும் ஒருங்கே
வாய்க்கப் பெற்றவர் அவர். ஆலிநாடர் தனக்குப் பிறந்த அந்தப் பிள்ளைக்கு
நீலன் என்று பெயரிட்டு அழைத்தார். நீலன் தம் ஐந்தாம் வயது தொடங்கி, கற்க
வேண்டியவற்றைக் கற்று, பெரும் புலமை பெற்றார். வடமொழியிலும் தமிழிலும்
புலமை பெற்று ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நிலைபெற்று வளர்ந்தார்.
திருமாலடியாரான அவர், திருமாலின் திருவருளாலே, ஆசுகவி, மதுரகவி,
சித்திரகவி, வித்தார கவி என நான்கு வகைக் கவிகளையும் பாடும் திறமையும்
வல்லமையும் பெற்றிருந்தார்.
வீரர் மரபில் தோன்றியவர் என்பதால், வாள், வில், வேல் முதலிய படைக்
கலங்களை பயன்படுத்தி போர் செய்வதில் வல்லவராகத் திகழ்தார். யானை, தேர்,
குதிரை, காலாட்படை ஆகிய நான்கு சேனைகளையும் நல்ல முறையில் நடத்திச் சென்று,
பகைவரை சுலபமாக வெற்றி கொள்ளும் தன்மை அவருக்கு வாய்க்கப் பெற்றிருந்தது.
அவருடைய கல்வியறிவையும் திறமைகளையும் வீரத்தையும் கண்ட சோழ மன்னன் அவரைத்
தன் படைத் தளபதியாக ஆக்கிக் கொண்டான்.
அந்தக் காலத்தில் நாலுகவிப் பெருமான் என்னும் சிறப்புடைய புலவன் ஒருவன்
வாழ்ந்து வந்தான். அவன் மற்றைய புலவர்களை எல்லாம் வாதில் வென்று, புலவரேறு
என்னும் பெருமையால் அகங்காரம் கொண்டிருந்தான். அவனுக்கு நீலனைப் பற்றித்
தெரிய வந்தது. தன் கல்விச் செருக்கால், நீலனிடம் வாதிட்டு அவரை வாதில்
வென்று காட்டிட ஆசை மிகக் கொண்டான். இந்தச் செய்தி தெரிந்து, அவரும் அந்தப்
புலவனிடம் வாதிட முன்வந்தார். வாதப் போர் பலமாக நடைபெற்றது. இறுதியில்
புலவன் தோல்வியைத் தழுவினான். ஆகவே தனக்கு இது வரை இட்டுவந்த நாலுகவிப்
பெருமான் என்ற பட்டத்தை இனியும் தான் வைத்திருக்க விரும்பவில்லை. எனவே தன்
பட்டத்தினை, நீலருக்கு இட்டு, நாலுகவிப் பெருமான் என்கிற விருதை அவருக்கு
அளித்தான்.
இதையறிந்த சோழ மன்னன், நீலரை அழைத்து, அவருக்கு மேலும் விருதுகளை
அளித்து, பாராட்டினான். பின்னர் நீலர் அந்தச் சோழனுக்காக போர்கள் பலவற்றை
மேற்கொண்டு, எதிரிகளை ஓடஓட விரட்டி வெற்றிவாகை சூடினார். இதனால் மகிழ்ந்த
சோழ மன்னன், நீலரின் வீரத்தையும் அறிவுக் கூர்மையையும் வியந்து பாராட்டி,
தன்னுடைய ஆட்சியின் கீழ் இருந்த திருமங்கை என்னும் ஊரைத் தலைநகராகச்
செய்து, ஆலிநாட்டுக்கு மன்னனாக்கி மகிழ்ந்தான்.
பகைவர்களுக்குக் காலன் போன்று திகழ்ந்ததால், பரகாலர் என்ற பெயரும்
நீலருக்கு உண்டாயிற்று. பரகாலர் என்பதற்கு காலத்தைக் கடந்து நிற்பவர்
என்னும் தத்துவ விளக்கப் பொருளும் உண்டு.
திருமங்கைக்கு நீலர் மன்னரானதும் அவரை எல்லோரும் திருமங்கை மன்னன் என்றே
அழைக்கலாயினர். இவரிடம் சாயை பிடிப்பான், தாளூதுவான், தோளாவழக்கன்,
உயரத்தொங்குவான் முதலான அமைச்சர்களும் இருந்தார்கள். இவர் ஆடல்மா என்று
பெயர்பெற்ற குதிரையில் ஏறி எங்கும் செல்வாராம்.
இப்படி இருக்கையில், சுமங்கலை என்னும் பெயர் கொண்ட தேவகன்னி ஒருத்தி,
தன்னுடைய தோழியர் குழாத்துடன் இமயமலையின் வளங்களைச் சுற்றிப்
பார்த்துக்கொண்டு வந்தாள். அப்போது, திருமாலின் அம்சராக எழுந்தருளியிருந்த
கபில முனிவர், தன்னுடைய சீடர்களுக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
சுமங்கலை அந்த இடத்துக்கு வந்து, இதைக் கண்ணுற்றாள். அப்போது அவருடைய
சீடர்களுள் ஒருவர் விகார வடிவத்தில் இருந்ததைக் கண்டு சுமங்கலை ஏளனம்
செய்தாள். அதனைக் கண்ட கபில முனிவர் பெருவருத்தமும் கோபமும் அடைந்தார்.
அவர் சுமங்கலையை நோக்கி, தேவ கன்னியான நீ இதே பூமியில் மானிடப் பெண்ணாகப்
பிறந்து, ஒரு மனிதனின் மனைவியாக வாழக் கடவாய் என்று சபித்தார். இந்த சாப
வார்த்தையைக் கேட்ட அவள் அஞ்சி நடுங்கினாள். தன்னுடைய செயலைப் பொறுத்து,
தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள். கபில முனிவரோ அவளை நோக்கி, நீ பரகாலரின்
மனைவியாகி, அவருடைய போர்க்கள வேள்வியைப் போக்கி, அவரை திருமாலின்
நல்லடியாராகத் திருத்தி, அவருடன் வாழ்ந்து, அதனால் உன் குறை தீர்ந்து, உன்
பொன்னாட்டை அடைவாயாக என்று அருள் புரிந்தார்.
கபில முனிவருடைய சாபத்தின்படி, சுமங்கலை திருவாலி நாட்டிலுள்ள
திருநாங்கூர்ப் பொய்கையில் தோழியருடன் நீராடி, குமுத மலரைக் கொய்து
விளையாடிக் கொண்டிருந்தாள். தோழியர் இவளை அங்கேயே விட்டுவிட்டு அவர்களுடைய
பொன்னாட்டுக்குப் போனார்கள். சுமங்கலை குமுத மலரையே தன் தாயாகவும்
பிறப்பிடமாகவும் கொண்டு, அதனருகில் ஒரு மானிடக் குழந்தையாகத் தோன்றினாள்.
அந்த நேரத்தில், திருமாலடியாரும், திருநாங்கூரில் வசித்து வருபவருமாகிய
மருத்துவர் ஒருவர், அந்தப் பொய்கைக்கு நீராட வந்தார். அப்போது இந்தக்
குழந்தையைக் கண்டார். சுற்றுமுற்றும் பார்த்தார். அருகில் யாரும் இல்லை
என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார். குழந்தையின் பொறுப்புக்கு யாரும் அங்கு
இல்லாத காரணத்தால், அக்குழந்தையைத் தன் இல்லத்துக்கு எடுத்துச் சென்று
மனைவியிடம் மகிழ்ச்சியுடன் அளித்தார். அவர்கள் இருவரும் அக்குழந்தைக்கு,
குமுத மலரின் அருகில் கிடைத்ததால், குமுதவல்லி என்னும் பெயரிட்டு
அழைத்தனர். அக்குழந்தையைத் தாம் பெற்றெடுத்த குழந்தையைப் போன்று செல்வ
வளத்தோடு வளர்க்கலாயினர்.
இப்படி வளர்ந்து வந்த குமுதவல்லி, திருமணப் பருவம் எய்தினாள்.
குமுதவல்லியைப் பற்றிய செய்தி பரகாலரை எட்டியது. அவர் திருநாங்கூரிலுள்ள
மருத்துவர் இல்லத்துக்குச் சென்று, அவரது வளர்ப்புப் பெண்ணாகிய
குமுதவல்லியைத் தனக்குத் திருமணம் செய்து தரவேண்டும் என்று
விண்ணப்பித்தார். ஆனால் குமுதவல்லியாரோ, திருவிலச்சினையும், திருநாமமும்
உள்ளவர்க்கு அன்றி மற்றவர்க்கு என்னைப் பேசவிடேன் என்று மறுத்துரைத்தாள்.
இதைக்கேட்ட பரகாலர் சற்றே யோசித்தார். அவள் சொற்படியே செய்வதெனத்
தீர்மானித்தார். உடனே திருநறையூரில் நம்பி திருமுன்பே சென்றார். வைணவ
லட்சணங்களுக்குரிய திருவிலச்சினை தரித்தார். பன்னிரண்டு திருநாமங்களையும்
சாத்திக் கொண்டு குமுதவல்லியிடம் மீண்டும் வந்தார்.
அதன் பின்னரும் குமுதவல்லியார் திருமங்கை மன்னரைப் பார்த்து, ஒரு வருட
காலம் நாள்தோறும் ஆயிரத்தெட்டு ஸ்ரீவைணவர்களை அமுது செய்வித்து, அவர்களுடைய
ஸ்ரீபாத தீர்த்தமும் தளிகைப் பிரசாதமும் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றினால்,
உம்மைப் பதியாக அடைவேன் என்று மொழிந்தாள்.
திருமங்கை மன்னரும் அதற்கு இசைந்து, உறுதிமொழி அளித்தார். ஆதலின்
குமுதவல்லியாரும் அவரை மணம் செய்துகொள்ள இசைந்தார். அதன்பின்
குமுதவல்லியாரை அவள் பெற்றோர் திருமங்கை மன்னருக்கு நாடும் ஊரும் அறிய
நல்லதோர் நாளில் மணம் செய்து கொடுத்தார்கள்.
குமுதவல்லியாரைத் தமது வாழ்க்கைத் துணை ஆக்கிக் கொண்ட திருமங்கை
மன்னரும், நாள்தோறும் ஆயிரத்தெட்டு ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அன்னமளித்து
ஆராதித்தார். இப்படி நாள்தோறும் நடைபெறும் நல்விருந்தினை நானிலத்தோர்
நயம்படப் பலருக்கும் நவின்று வந்தார்கள். இச்செய்தி சோழ மன்னனின்
செவிகளுக்கும் எட்டியது.
அவ்வளவுதான்! திருமங்கை மன்னன் தனக்குத் தரவேண்டிய பகுதிப் பணம்
தாமதமாவதற்கான காரணம் இதுதானோ என்று எண்ணினான். தன் அரசுக்குச் சேர வேண்டிய
பகுதிப் பணம் விரைந்து வந்தாக வேண்டும் என்னும் செய்தி தாங்கிய ஓலையுடன்,
தன் தூதுவர்களை திருமங்கை மன்னனிடம் அனுப்பினான் சோழமன்னன்.
திருமங்கை சென்ற தூதுவர்கள் பகுதிப் பணத்தை விரைவில் தருமாறு பரகாலரை
வற்புறுத்தினார்கள். பரகாலருக்குக் கடுங் கோபம் ஏற்பட்டது. விளைவு -
தூதுவர்களை அடித்து விரட்டினார். அவர்கள் அஞ்சி அங்கிருந்து ஓடினார்கள்.
நேராகத் தம் அரசனிடம் சென்று நடந்த நிகழ்ச்சியைத் தெரிவித்தார்கள். பரகாலர்
தனது ஆணையை மீறிவிட்டார் என்பதற்காகக் கோபம் கொண்ட சோழ மன்னன், தனது
சேனாதிபதியை அழைத்து, பெரும் படையுடன் திருமங்கை சென்று பரகாலனை பிடித்து
வருமாறு ஆணையிட்டான்.
சேனாதிபதியும் யானை, குதிரை, காலாட் படைகளுடன் சென்று பரகாலரை வளைத்துப்
பிடிக்கப் போனான். மங்கை மன்னனோ தன் குதிரையின் மேலேறித் தம் படைகளுடன்
வந்து, ஆரவாரத்துடன் அவர்கள்மேல் விழுந்து, சேனைகளை எல்லாம்
துரத்தியோட்டிவிட்டார். சேனாதிபதி வெட்கப்பட்டு ஓடினான். இதைக்
கேள்விப்பட்ட அரசன், கோபத்தால் கண்கள் சிவந்து தனது சதுரங்க சேனைகளுடன்
புறப்பட்டு வந்து, பரகாலரைப் பிடிக்கும்படி தன் படை வீரர்களுக்கு உத்தரவு
பிறப்பித்தான்.
படையினரும் அவ்வண்ணமே பரகாலரை வளைத்தனர். பரகாலரும் முன்புபோல வாளும்
கையுமாக ஆடல்மா என்னும் தனது குதிரைமேல் ஏறி வந்தார். ஆரவாரத்துடன்
எதிர்த்து வந்த படையினரைப் பாழாக்கித் துரத்த, எல்லோரும் தோற்று ஓடிவந்து
சோழ மன்னன் மேல் விழுந்தார்கள். சோழனும் ஓடுகிறவர்களை சினத்துடன்
நிறுத்தினான். பின் பரகாலரை படைகளின் நடுவே அகப்படும்படி வளைத்துக்
கொண்டான். பரகாலரும் வீரமுடையவராய்த் தமது கையிலிருந்த வாளின் பலத்தினால்
படையை அழிக்கத் தொடங்கினார்.
இதனைக் கண்ட அரசன் இவரைப் பார்த்து, நீர் எதற்கும் அஞ்சவேண்டுவதில்லை.
உமது வீரம் கண்டு மகிழ்ந்தேன். நீர் செய்த தவறுகளை எல்லாம் மறந்தேன்.
அஞ்சாமல் என்னை நம்பி வாரும் என்று அழைத்தான். பரகாலரும் அரசன் மீதான பகைமை
மறந்து உடன் சென்றார். அரசனும் பரகாலரை நோக்கி, தரவேண்டிய பகுதிப் பணத்தை
தந்துவிடவேண்டும் எனவும், அதுவரையில் அமைச்சர்களின் பாதுகாவலில் பரகாவலர்
இருக்க வேண்டும் எனவும் பணித்தார். அமைச்சர்களும் பரகாலரைப்
பிடித்துக்கொண்டு, ஒரு தேவாலயத்தில் சிறை வைத்தனர்.
இப்படி, திருமங்கை மன்னர் அந்தக் கோயிலில் மூன்று நாட்கள் உணவின்றி
சிறையிருந்தார். அந்த நேரம், திருமங்கை மன்னரது கனவில் பேரருளாளப் பெருமான்
எழுந்தருளி, உமது பகுதிக்கு வரவேண்டிய பணம் நாம் தருகிறோம்.
காஞ்சிபுரத்துக்கு வாரும் என்று அருளினார். பரகாலரும் மறுநாள்
அமைச்சர்களிடம், காஞ்சிபுரத்தில் பணம் புதைத்து வைக்கப்பட்டுள்ளது. அங்கு
வந்தால் உங்கள் பகுதியைத் தருகிறேன் என்றார். அமைச்சர்கள் அதனை அரசரிடம்
தெரிவித்தனர். அரசரும் இதற்கு உடன்பட்டு, தக்க காவலுடன் பரகாலரை
காஞ்சிபுரத்துக்கு அனுப்பி வைத்தார்.
பலத்த காவலுடன் காஞ்சிபுரம் சென்ற பரகாலர், புதையல் பொருளைக் காணாது
வருந்திக் கிடந்தார். அவருடைய வருத்தமுற்ற மனத்தை மகிழ்விக்க எண்ணிய காஞ்சி
பேரருளாளப் பெருமான், அஞ்சாது நீர் அதை எடுத்துக் கொள்ளும் என்று பணம்
இருக்கும் இடத்தை அடையாளமாகக் காட்டியருளினான். பேரருளாளன் காட்டிய
இடத்துக்குச் சென்ற பரகாலர், அங்கே பணம் இருக்கக் கண்டு, அதை எடுத்து,
கப்பம் செலுத்த வேண்டிய பணத்தைக் கொடுத்துவிட்டு, அதுபோக மீதி இருந்த
பணத்தை ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு உணவளிப்பதற்காக வைத்துக் கொண்டார்.
அங்கே நடந்த நிகழ்ச்சியை அரசனுக்கு அறிவித்த அமைச்சர், அரசர் முன்பாக
திருமங்கை மன்னர் தந்த கப்பப் பணத்தை வைத்தார். வேந்தனோ, காஞ்சி அருளாளப்
பெருமானான வரதராஜப் பெருமாளே பணம் தந்த செய்தியைக் கேட்டு
பெருவியப்படைந்தான். இவர் மனிதர்களுள் மேம்பட்ட பெருமை கொண்டவர்; அவரை
மதியாமல் இப்படி நடந்துகொண்டோமே என்று வருந்தினான். காஞ்சிப் பேரருளாளன்
அளித்த கப்பப் பணத்தை தனது கருவூலத்தில் சேர்க்க அவனுக்கு மனம் வரவில்லை.
எனவே திருமங்கை மன்னரை அழைத்தான். அவரிடமே அப்பணத்தையும், சிறப்பாக
வெகுமதிகளையும் அளித்து அவற்றை ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு உணவிட வைத்துக்
கொள்ளுமாறு வேண்டினான். அதன் மூலம், ஆழ்வாரான திருமங்கை மன்னரை மூன்று
தினங்கள் பட்டினி போட்ட பாவத்தைப் போக்கிக் கொண்டான்.
நாட்கள் சென்றன. ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ததீயாராதனம் குறைவற நடைபெற்று
வந்தது. ஆனால், ஆழ்வாரின் கருவூலத்தில் இருந்த திரவியமோ குறைவுற்று வந்தது.
ஆழ்வாரிடம் உள்ள பணம் யாவும் செலவழிந்ததும், ததீயாராதனம் தொடர்ந்து நடைபெற
என்ன வழி என்று யோசிக்கலானார் திருமங்கையாழ்வார். வழிப்பறி செய்தேனும்
பணம் சேர்த்து ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு உணவளிக்கும் எண்ணம் ஏற்பட்டது. அப்படியே
தமக்குத் துணையாக இருந்த நால்வரோடு பொருள் மிகுந்தவரிடமிருந்து வழிப்பறி
செய்து பொருள் ஈட்டி, ஸ்ரீவைஷ்ணவ அடியார்களுக்கு உணவளிக்கும் செயலை நடத்தி
வந்தார்.
இப்படி இருக்கும்போது, ஒருநாள் ஆழ்வார் வழிப்பறி செய்வதற்காக,
திருமணங்கொல்லையில் ஓர் அரச மரத்தில் பதுங்கியிருந்தார்.
ஸ்ரீவைஷ்ணவர்களுக்காகவே வழிப்பறி செய்யும் பரகாலரது எண்ணத்தை உணர்ந்த
பெருமாள், அவ்வழியில் மணமக்கள் கோலம் கொண்டு தேவியுடன், எல்லா
அணிகலன்களையும் அணிந்து கொண்டு, பரிவாரம் புடைசூழ பலவகைத் திரவியங்களுடன்
வந்து கொண்டிருந்தார்.
இக்கூட்டத்தைக் கண்ட ஆழ்வார் மகிழ்ச்சி மிகக் கொண்டார். உருவிய வாளும்
கையுமாக, தன் பரிவாரங்களுடன் அவர்களை வளைத்துக் கொண்டார். உள்ளே மணக்
கோலத்தில் அமர்ந்திருந்த திவ்விய தம்பதியிடம் இருந்த அணிகலன்களை எல்லாம்
கவர்ந்து கொண்டார். பின் அறுகாழி மோதிரத்தைக் கடித்து வாங்க, எம்பெருமானும்
இதைக்கண்டு, நம் கலியனேஎன்று அருளிச் செய்தார்.
பின்னர் அப்படிக் கவர்ந்த அணிகலன்களை எல்லாம் மூட்டையாகக் கட்டி
வைத்தார். அந்த மூட்டையை எடுக்கப் பார்க்க, அவை பெயர்க்கவும் முடியாதபடி
கனத்து இருந்தது. எவ்வளவோ கனமுள்ள பெரும் பொருட்களை எல்லாம் தூக்கிய
கைகளால், இந்தச் சிறு மூட்டையைத் தூக்க முடியாமல் போகவே ஆழ்வார் கொஞ்சம்
அசந்து போனார். அவர் மணவாளனாக வந்த அந்த அந்தணனைப் பார்த்து, நீ மந்திரம்
ஏதும் செய்தாயோ? என்று கோபத்துடன் கேட்டார். பிறகு, நீ அந்த மந்திரத்தைச்
சொல்லாவிடில், இந்த வாளுக்கு இரையாவாய் என்று தம் கையில் வைத்திருந்த
வாளைக் காட்டி அதிகாரத்துடன் கேட்டார். மணவாளக் கோலத்திலிருந்த
எம்பெருமானும் எட்டு எழுத்தாகி, மூன்று பதமான திருமந்திரத்தை ஆழ்வாரின்
வலது திருச் செவியில் உபதேசித்துக் காட்சி கொடுத்தார்.
அவ்வளவுதான்! அதுவரையில் இவருக்கு இருந்த அறியாமை விலகியது. திருமந்திர
அர்த்தம் விளங்கப் பெற்ற ஆழ்வார், தாம் அறிந்த திருமந்திரத்தையும், அதற்கு
உள்ளீடான ஸ்ரீமந் நாராயணனுடைய வடிவமாகிய உருவத்தையும் அருள்மாரி என்னும்
பெரிய பிராட்டியின் அருளாலே நேரில் கண்டு தரிசித்து உள்ளம் களி கொண்டார்.
இதனால் உண்டான ஞானத்தினாலும், அன்பினாலும் அவர் பெரிய திருமொழி,
திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, சிறிய
திருமடல், பெரிய திருமடல் என்கிற ஆறு பிரபந்தங்களையும் அருளிச் செய்தார்.
நம்மாழ்வார் அருளிச் செய்த நான்கு வேதங்களின் சாரமாகிய நான்கு
பிரபந்தங்களுக்கும் ஆறு அங்கமாக ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்கிற
நான்கு விதமான கவிகளால் அருளிச்செய்து சிறப்புற்றார். இதனால் பரகாலருக்கு
நாலுகவிப் பெருமாள் பட்டப் பெயர் இன்னும் சிறப்புற வழங்கலாயிற்று.
அதன் பிறகு அவர் திருமால் திருத்தல தரிசனம் செய்யும் அவா மிகப்
பெற்றார். அப்படியே தலங்கள் தோறும் சென்று, ஆங்காங்கு எழுந்தருளியுள்ள
திருமாலை வணங்கிப் பின் சோழ மண்டலத்துக்கு எழுந்தருளினார். அந்த நேரத்தில்
ஆழ்வாரின் சீடர்கள், நாலுகவிப் பெருமாள் வந்தார்! நம் கலியன் வந்தார்!
ஆலிநாடார் வந்தார்! அருள்மாரி வந்தார்! கொங்கு மலர்க் குழலியர்வேள்
வந்தார்! மங்கை வேந்தர் வந்தார்! பரகாலர் வந்தார்! என்று விருது கூறிச்
சென்றார்கள்.
அப்போது அங்கேயிருந்த சைவ சமயக் குரவர் நால்வருள் ஒருவரான
திருஞானசம்பந்தரின் சீடர்கள், திருமங்கை மன்னர் நாலுகவிப் பெருமாள் என்ற
விருது பெற்றவர்போலே விருது கூறல் கூடாது என்று மறுத்துத் தடுத்தனர்.
விஷயம் திருஞானசம்பந்தருக்குச் சென்றது. அதனால் ஆழ்வார் வெண்ணெயுண்ட மாயனை
எழுந்தருளுவித்துக் கொண்டு, சம்பந்தருடன் வாதிக்கச் சென்றார். ஒரு
குறளாயிருநிலம் என்ற திருமொழியை அருளிச் செய்து, தம் பெருமையெல்லாம்
புலப்படும் வண்ணம் பாடலைப் பாடினார்.
ஞானசம்பந்தர் பிரான் ஆழ்வாரை நோக்கி, உமக்கு நாலுகவிப் பெருமாள் என்னும்
விருது பொருந்தும், ஆதலினால் விருதூதிக் கொண்டு செல்வீராக என்று மனமுவந்து
கூறினார்.
திருமங்கை மன்னர் பல தலங்கள் தோறும் சென்று தலத்து இறைவனைச் சேவித்து
திருவரங்கம் வந்தார். அங்குள்ள பெரிய பெருமாளுக்கும் அழகிய மணவாளனுக்கும்
விமானம், மண்டபம், திருத்தளிகை, திருமதில், கோபுரம் முதலிய தொண்டுகள் செய்ய
விரும்பினார். அதற்காக நாகப்பட்டினம் சென்று பெரும் பொன்னை எடுத்து
வந்தார்; அதனை விற்றுப் பெற்ற பொருளைக் கொண்டு விமானம், மண்டபம் முதலியன
கட்டுவித்தார்.
இதனைக் கண்ட தொண்டரடிப்பொடி ஆழ்வார், மலர் பறிக்கும் தமது ஆயுதத்துக்கு
திருமங்கை மன்னருடைய பெயர்களுள் ஒன்றான அருள்மாரி என்னும் பெயரினை இட்டு
மகிழ்ந்தார்.
பின்னர் திருமங்கையாழ்வார், விமானம், மண்டபம், கோபுரம் முதலிய
திருத்தொண்டுகள் செய்து அரங்க நகரைப் பொலிவுடன் திகழச் செய்தார்.
இனி அவருடைய பாசுரங்களில் இருந்து சிறிது அனுபவிப்போம்...
நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி என்ற
பிரிவில் ஏறக்குறைய 1100 பாடல்கள் பாடியுள்ளார். இது போக
திருநெடுந்தாண்டகம், திருக்குறுந்தாண்டகம், பெரிய திருமடல், சிறிய
திருமடல், திருவெழுகூற்றிருக்கை ஆகியவற்றையும் இயற்றியுள்ளார். நாலாயிர
திவ்வியப் பிரபந்தப் பாசுரங்களின் எண்ணிக்கையில் திருமங்கையாழ்வாரின் பங்கு
கணிசமானது. கவித்துவமாக, இலக்கணப்படி அமைந்த பல வகைப் பாடல்களையும்
இயற்றியுள்ளார். பெரும்பாலான திவ்விய தேசங்களையும் பாடியிருக்கிறார்.
திருவதரியாசிரமம் (தேவப் பிரயாகை), திருப்பிருதி, நைமிசாரண்யம்,
பத்ரிகாசிரமம் போன்ற வடநாட்டு திவ்விய தேசங்களைப் பாடியுள்ளார். அதோடு,
தென்னாட்டுக் கோயில்களையும் விட்டுவைக்கவில்லை. ஊர் ஊராகச் சென்று பல்வேறு
தலங்களையும் பாடியிருக்கிறார்.
திருமங்கையாழ்வாரின் முதல் பாசுரம்:
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந்துயர் இடும்பையில்
பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு
அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்
உணர்வெனும் பெரும்பதம்
தெரிந்து
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமமே
திருமங்கையாழ்வார், தான் எப்படி நாராயண நாமத்தின் பொருளை அறிந்து
கொண்டேன் என்பதை விளக்கி, அதை அடைந்த விதத்தையும் தெரிவிக்கிறார். தன்
கடந்த காலத் தவறுகளைச் சொல்லி, அதற்காகத் தாம் வருந்துவதையும்
தெரிவிக்கிறார். அந்த வருத்தம் தீரவே நாராயணன் தமக்கு அவனுடைய நாம மகிமையை
வெளிக்காட்டி உளம் திருத்தினான் என்பதைச் சொல்கிறார்.
முதல் பத்துப் பாடல்களும் ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து
மந்திரத்தின் மகிமையைச் சொல்கின்றன. இந்த எட்டெழுத்து மந்திரப் பொருளை
உணர்ந்து தெளிந்தால் உலகு தெளியும். ஆயினும் இந்த எட்டெழுத்து எப்படிப்பட்ட
நன்மைகளை எல்லாம் செய்யவல்லது என்பதை ஆழ்வார் தம் அனுபவத்தின்பாற்பட்டு
வெளிப்படுத்துகிறார் இப்படி...
குலந்தரும் செல்வம் தந்திடும்
அடியார் படுதுயர் ஆயினவெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும்
அருளொடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்.
நல்ல சுற்றத்தைத் தரும்; செல்வ வளத்தைத் தரும்; அடியவர்கள் படும்
துயரங்களையெல்லாம் நிலந்தரஞ்செய்யும் - அதாவது தரைமட்டமாக்கி விடும்; நீள்
விசும்பாகிய பரமபதத்தைக் கொடுக்கும்; அருளோடு பெருநிலமும் வலிமையும்
கொடுக்கும்; மற்றெல்லாவற்றையும் தரும்; பெற்ற தாயினும் அதிகமான பரிவைத்
தரும்; நல்லதே தரும் திருநாமமே நாராயணாய என்னும் திருமந்திரம்...
நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் கிட்டத்தட்ட ஒரு முழு ஆயிரம் அவருடைய
பெரிய திருமொழி பரவி நிற்கிறது.
திருமங்கையாழ்வாரின் திருவெழுகூற்றிருக்கை என்பது மூன்றாவது ஆயிரமாகிய
இயற்பாவில் சேர்க்கப்பட்டிருக்கிறது. எழுகூற்றிருக்கை என்பதும் கடினமான
பாட்டமைப்பு. ஏழு, கூற்று, இருக்கை என்று பிரிப்பார்கள். ஏழு அறையாக்கி
சிறுமிகளின் பாண்டியாட்டம் போல கட்டம் வைத்து புகுந்து வௌதப்படும் அமைப்பு.
ஒன்றிலிருந்து ஏழு வரை ஏறியும் இறங்கியும் சொற்கள் அமைக்கப்படும். இதைச்
சித்திரக் கவி வகையிலும் சேர்ப்பார்கள்.
திருமங்கையாழ்வாரின் எழுகூற்றிருக்கை 46 அடிகள் கொண்டது. நிலைமண்டில
ஆசிரியப்பா வகையைச் சேர்ந்தது. இதை, தேர் வடிவத்தில் கோலம் போல எழுத
முடியும். ரதபந்தம் என்று இதற்குப் பெயர்.
தமிழில் அகத்துறை நூல்களில் மடல் ஒரு வகை. இதை பக்தி இலக்கியத்தில்
முதலில் பயன்படுத்தியவர் திருமங்கையாழ்வார். சங்க இலக்கியங்கள் மடல் என்று
பெரும்பாலும் பனை மடலையே குறிக்கும். விரும்பிய பெண்ணை அடைய முடியாத
நிலையில் மடலேறியாவது அவளைப் பெறுவேன் என்று பனை மடல்களால் ஆன குதிரை
வடிவம் அமைத்து ஊர் நடுவே காதலன் தோன்றிப் பிடிவாதம் செய்து அடையும்
முரட்டுக் காதல் வகை இது. அவன் மேல் இரக்கம் கொண்டு பெண்ணைப் பெற்றவர்கள்
திருமணத்துக்கு சம்மதிப்பார்களாம். இந்த வழக்கத்தை மாற்றி மென்மையாக்கிய
பெருமை திருமங்கையாழ்வாருக்கு உரியது.
தான் ஒரு ஆண் என்றதால், தன் தன்மைக்கு ஏற்ப மடல் ஏறத் துணிந்தார்
ஆழ்வார். ஆனால் உலகில் ஆண் என்ற புருஷாகாரம் பகவான் ஸ்ரீ விஷ்ணுவுக்கே
உரியது என்று புருஷ சூக்தம் புகல்வதால், பகவானைத் தவிர அனைவரும் பெண்களே.
இதையே தன் சிறிய திருமடலுக்கும் பெரிய திருமடலுக்கும் மூலமாகக் கொள்கிறார்
ஆழ்வார்.
பெண்கள் மடலேறுதல் தகாது என்று இலக்கணம் சொன்னபோதும், தன்னை ஒரு பெண்ணாக
எண்ணி, திருமால் மீது காதல் கொண்ட பெண், அவனை அடைய முடியாத நிலையில் மடல்
ஏறத் துணிந்ததாகப் பாடுகிறார்.
அன்ன அறத்தின் பயனாவது?, ஒண்பொருளும்
அன்ன திறத்ததே ஆதலால், - காமத்தின்
மன்னும் வழிமுறையே நிற்றும் நாம் மானோக்கின்
அன்ன நடையார் அலரேச ஆடவர்மேல்,
மன்னும் மடலூரார் என்பதோர் வாசகமும்,
தென்னுரையில் கேட்டறிவதுண்டு, அதனை யாம் தெளியோம்,
மன்னும் வடநெறியே வேண்டினோம்- வேண்டாதார்
தென்னன் பொதியில் செழுஞ் சந்தனக் குழம்பின்,
அன்னதோர் தன்மை அறியாதார், - ஆயன்வேய்
இன்னிசை ஓசைக்கு இரங்காதார், மால்விடையின்
மன்னும் மணிபுலம்ப வாடாதார், - பெண்ணைமேல்
பின்னுமவ் வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலுக்கு,
உன்னி உடலுருகி நையாதார், ... -
அன்ன நடையார் அலரேச ஆடவர் மேல் மன்னு மடலூரார் என்பதோர் வாசகமும்
தென்னுரையில் கேட்டதுண்டு அதனை யாம் தெளியோம். - என்றதில், பெண்கள் வதந்தி
பரவவேண்டும் என்பதற்காக, ஆண்களுக்காக மடல் ஏற மாட்டார்கள் என்று தமிழ்
நூல்களில் (தென்னுரை) கேட்டதுண்டு; யாம் தெரிந்துள்ளோம் என்று
தெரிந்திருந்தும் பாடுகிறார்.
திருமங்கையாழ்வார் காலத்துக்கு (8-ம் நூற்றாண்டு) முன்பும் பெண்கள்
மடலேறுவதாக சில குறிப்புகள் கலித்தொகை போன்ற சங்க நூல்களில் உள்ளன. ஆனால்
அவை, காதலன் கிடைக்கவில்லை என்றால் பெண்ணாகிய நான் சமூக ஒழுங்கை மீறி
மடலூர்ந்து வருவேன் என்று அடிபணிய வைக்கும் வகையில் உள்ளன. இங்கும்
அதுபோல், கண்ணன் கிடைத்திலன் என்பதன் காரணத்தால் திருமங்கையாழ்வார்
பெண்ணாகி மடலேறினார் என்று தெளியலாம்.
ஆழ்வார்களிலேயே மிக அதிக திருத்தலங்களுக்குச் சென்று, ஊர் ஊராகச் சென்று
தரிசித்த்ப் பாடியவர் திருமங்கையாழ்வார்தான். இந்த ஆழ்வாரின் பாடல்கள் நம்
ஆலயங்களின் பழைமையை நிரூபிக்கும் சரித்திரச் சான்றுகள்.
திருமங்கையாழ்வாரின் வாள் வீச்சைப் போன்றது அவரது கவிதை வீச்சு! இதை,
வேறு எவரிடமும் காண முடியாது. இலக்கண வகைகள் பலவற்றையும் முயன்று அருமையான
கவிதைகள் படைத்தார். பல கோவில்களைச் செப்பனிடத் திருப்பணிகள் செய்வித்தார்.
எல்லாவற்றையும் விட, கம்பீரமான, முரட்டு பக்தியை இந்த மண்ணில்
விதைத்தவர் திருமங்கையாழ்வார்.
திருமங்கையாழ்வார் வாழி திருநாமம்


கலந்த திருக்கார்த்திகையில் கார்த்திகை வந்தோன் வாழியே
காசினியில் குறையலூர்க் காவலோன் வாழியே
நலந்திகழ் ஆயிரத்துஎண்பத்துநாலு உரைத்தான் வாழியே
நாலைந்தும் ஆறுஐந்தும் நமக்கு உரைத்தான் வாழியே
இலங்கு எழுகூற்றிருக்கை இருமடல் ஈந்தான் வாழியே
இம்மூன்றில் இரு நூற்று இருபத்தேழு ஈந்தான் வாழியே
வலந்திகழும் குமுதவல்லி மணவாளன் வாழியே
வாட்கலியன் பரகாலன் மங்கையர்கோன் வாழியே

http://www.prabandham.com/index.php?option=com_content&view=article&id=116:2010-06-07-11-58-11&catid=45:2010-06-06-17-00-21&Itemid=125

Admin
Admin

Posts : 48
Join date : 20/06/2010

https://mukkulam.ace.st

Back to top Go down

Thirumangai mannan Empty Re: Thirumangai mannan

Post  Admin Thu Jul 08, 2010 8:47 am

திருமங்கையாழ்வார்:
பிறந்த காலம் - 8 ம் நூற்றாண்டு
பிறந்த ஆண்டு - நள ஆண்டு
பிறந்த
மாதம் - கார்த்திகை
திருநட்சத்திரம் - கார்த்திகை
திதி - பௌர்ணமி
(வியாழக்கிழமை)
அம்சம் - சாரங்கம் (வில்)
சோழப் பேரரசில் உள்ள திருவல்லிநாடு என்னும் நகருக்கு அருகில் உள்ள
திருக்குறையலூர் என்னும் கிராமத்தில், ஆலிநாடார் என்னும் சேணைத்தலைவர்,
வல்லித்திரு என்னும் தம்பதியரிடத்து உதித்தத் தெய்வப்பிறவியே
திருமங்கையாழ்வார் ஆவார். அவரது இயற்பெயர் நீலன் ஆகும்.
சிறுவயதிலேயே வில், வாள், வேல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று
அனைத்து வீரக்கலைகளிலும் சிறந்து விளங்கினார். வீரத்தோடு வேதங்களும்,
முறையான கல்வியும் கற்றுத் தேர்ந்தார்.
அவரது வீரத்திற்கும் விவேகத்திற்கும் பரிசாக சோழ மன்னர் திருமங்கை
என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்ட ஒரு சிற்றரசை நீலருக்குப் பரிசாக
வழங்கினார்.
எதிரிகளுக்கு இவர் காலனாக இருந்ததால் இவரை காலன் என்று அழைத்தனர். சோழ
அரசில் பர என்னும் அடைமொழியை பெயருக்கு முன் வைக்கும் முறையால் (வேங்கையின்
மைந்தன் என்னும் நூலில் நீங்கள் படித்திருக்கலாம்...பர மற்றும் உடையவர்
என்னும் பட்டப்பெயர் மன்னர்களின் பெயருக்கு முன் ஒவ்வொரு முறையும் மாறி
மாறி வரும் என்று) இவர் பரகாலன் என்னும் பெயருடன் சிற்றரசராக
முடிசூட்டப்பட்டார்.
ஒரு முறை, நீலருக்கு.... சுமங்கலி என்னும் தேவகன்னிகையைக் காண
நேரிட்டது. என்னாது, தேவகன்னிகையை ஒரு மனிதன் காண்பதா???
அட ஆமாம்பா, மெய்யாலுமேதான், சுமங்கலி என்னும் தேவகன்னிகை கபிலமுனி
என்னும் முனிவரின் சாபத்தினால் சாதாரண மானுடப்பெண்ணாகப் பூலோகத்திலே
பிறந்து குமுத வல்லி என்னும் பெயர் கொண்டு வளர்ந்தார். தன் பிறவியை பற்றி
முழுதும் அறிந்த அந்தப் பெண், தன் தந்தையிடம், மணந்தாள் ஆலிநாட்டார் மகனையே
மணப்பேன், என்று கூற, அவள் தந்தையும் அதற்கு சம்மதித்தார்.
விதியும் வந்து விளையாட,
மதியும் அதன் வழியில் தள்ளாட,
காலத்தின்
கட்டுப்பாட்டில் கிடக்கும் மானுடர்களான நீலரும், குமுதவல்லியும் ஒருவரை
ஒருவர் ஒரே நேரத்தில் காண நேர்ந்தது.
மங்கையர் கோனின் மனதைத் திருடிய அந்த தேவகன்னிகையைக் கண்ட
மாத்திரத்திலேயே, நீலருக்கு அவள் மேல் காதல் அலர்ந்தது.
கண்டதும் காதல்; அவள்
கைப் பிடிக்கவும் ஆவல்;
கண்களெல்லாம் அவளின்
தேடல்;
உள்ளமோ அவளிடமே ஓடல்...
தன் விருப்பத்தை அப்பெண்ணிடம் வெளிப்படுத்திய பொழுது, குமுதவல்லியார்,
அவருக்கு இரண்டு நிபந்தனைகளை விதித்தார். அதாவது,
1. அவர் பஞ்சசம்ஸ்காரம் செய்துக் கொள்ள வேண்டும்
2. ஒரு நாளைக்கு
ஆயிரத்தெட்டு பெருமாள் பக்தர்களுக்கு அமுது படைக்க வேண்டும், ஓராண்டு கால
அளவிற்கு. அவர்கள் பாதம் கழுவிய நீரால் நம் தலை கழுவ வேண்டும்.
இந்த இரண்டையும் செய்வதாக நீலரும் ஒப்புக் கொண்டார். அதன்படி அவரது
முதல் கடனை முதலில் நிறைவு செய்தார்...
எப்படி நிறைவு செய்தார்??
பஞ்சசம்ஸ்காரம் என்பதை நல்வினை சடங்குகள் என்று தமிழில் சொல்லுவர்.
அதாவது,
1. தாப சம்ஸ்காரம் - (தாபம் என்றால் சூடு என்று பொருள்) பெருமாளின்
திருஅடையாளங்களாகிய சங்கு, சக்கரத்தில், வலது தோளில் சக்கரத்தையும், இடது
தோளில் சங்கையும் நிரந்தரமாகத் தரிப்பது.
2. புண்ட்ர சம்ஸ்காரம் - (திருமண் காப்புத் தரித்தல்) இறைவனின்
பன்னிரண்டு திருப்பெயர்களைச் சொல்லி, பன்னிரு இடங்களில் திருமண் அணிதல்.
அதாவது,
கேசவாய நம என்று கூறி நெற்றியில் திருமண் அணிய வேண்டும். இதேபோல்,
நாராயணாய நம என்று நாபியிலும் மாதவாய நம என்று மார்பிலும் கோவிந்தாய நம
என்று நெஞ்சிலும் விஷ்ணுவே நம என்று வலது மார்பிலும் மதுசூதணாய நம என்று
வலது புயத்திலும் த்ரிவிக்ரமாய நம என்று வலது தோளிலும் வாமனாய நம என்று
இடது நாபியிலும் ஸ்ரீதராய நம என்று இடது புயத்திலும் ரிஷிகேசாய நம என்று
இடது தோளிலும் பத்மநாபாய நம என்று அடிமுதுகிலும் தாமோதராய நம என்று
பிடரியிலும் திருமண் தரிக்க வேண்டும்.
3. நாம சம்ஸ்காரம் - (நாமம்
என்றால் பெயர்) அதாவது, பெருமாளின் பெயர் அல்லது அவரது அடியவர்களான
ஆசார்யர்களின் பெயர்கள் ஏதாவது ஒன்றை வைத்து, அப்பெயரின் முடிவில் தாசன்,
அடியவன் என்று வருமாறு குருவால் பெயர் வைக்கப் பெறுதல்.
4. மந்த்ர சம்ஸ்காரம் - (மந்த்ரம் - மந்திரம்) எட்டெழுத்துகளுடைய
திருமந்திரத்தையும், த்வயம், சரமசுலோகம் ஆகியவற்றை அதன் மறைபொருளோடு
குருவின் மூலம், காதில் உபதேசமாகப் பெறுதல்.
5. யாக சம்ஸ்காரம் - (யாகம் - பூசை, ஆராதணை) திருவாராதணை மற்றும் பூசை
செய்யும் முறைகளை முறையாகக் கற்றுக் கொள்ளல்.
இவை ஐந்தனையும் குருவிடமிருந்து (ஆசார்யரிடமிருந்து) ஒரே சமயத்தில்
பெறுதலே பஞ்ச சம்ஸ்காரம் ஆகும். பஞ்ச சம்ஸ்காரம் பெற்றுக் கொண்ட ஒருவர் வேத
முறைப்படி வைணவராகிறார். இதன் மூலம் அவரது உடல், மனம், சொல், சிந்தனை
அனைத்திலும் வைணவநெறிக்கான நல்வினைகளும், சிந்தனைகளும் அவர் மனத்தில் பதிய
ஆரம்பிக்கும்.
அது சரி, நீலர் இந்த பஞ்ச சம்ஸ்காரத்தை எந்த குருவிடமிருந்து பெற்றுக்
கொண்டார்??? நீலருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைத்த அந்த குரு யார்???
யார்?? யார்????
யார் அந்த குரு தெரியுமா???
அவர்தான் குருவுக்கெல்லாம் குருவானவர்.
குற்றமில்லா குணத்தவர். குறையொன்றும் வைக்கா குறையற்றவர்... எம்பெருமான்
திருநறையூர் ஸ்ரீநிவாசப் பெருமாள்....
இறைவனையே குருவாகக் கொண்டு, அவர் மூலம் பஞ்ச சம்ஸ்காரம் பெற்ற ஒரே
வைணவர், நம்ம நீலர்தான்.
2. கட்டியவள் பேச்சை மீறலாம், காதலியின் பேச்சை.... அய்யோ! அபச்சாரம்,
அபச்சாரம்.... மீறவேப் படாது.....
இரண்டாவது வேண்டுகோளையும் இளைக்காமல் ஏற்றுக் கொண்டு, அதன்படி செய்தார்.
நாம என்ன சொன்னாலும் இவர் கேட்குறாருப்பா, இவருதான் உலகத்திலேயே ரொம்ப
ரொம்ப நல்லவரு.... நல்லவரு மட்டுமா? நல்லவர், வல்லவர், என் உள்ளக் கள்ளவர்
என்று... நீலர், குமுதவல்லியின் திருமணம் இனிதே நடந்தேறியது.
இரண்டாவது கடனை நிறைவேற்றும் போது, அவர் சளைக்காவிட்டாலும்,
அவரிடமிருந்த செல்வம் இளைத்துவிட்டது. அவரிடம் இருந்த செல்வம் குறைந்ததால்,
அவரால் கப்பம் செலுத்த இயலவில்லை. அதனால் கோபம் கொண்ட சோழப் பேரரசன் அவரது
அரசைக் கைப்பற்றிக் கொண்டார். ஆனால், அவர் அதற்காகக் கவலைப் படவில்லை.
எப்படியாவது அடியவர்களுக்கு அமுது படைக்க வேண்டும் என்பதிலேயே திண்மையான
எண்ணம் கொண்டார். ஆனால், அவர் கையில் தான் பொருள் இல்லையே, பின் வெறும்
எண்ணம் மட்டும் எப்படி நிறைவேறும்.... கானல் நீரில் தாகம் எவ்வாறு
தீரும்??? வெறுங்கையில் எப்படி முழம் போட முடியும்....? எப்படி? எப்படி??
ஆழ்ந்த சிந்தனை, ஆழ்ந்த, ஆழ்ந்த சிந்தனை.....அதன் இறுதியிலே ஒரு ஆச்சரியமான
முடிவு...
அதுதான், 'நாலு பேருக்கு நல்லது ன்னா எதுவுமே தப்பில்ல' அப்படின்னு,
அவர் தன் முயற்சிக்காக எந்த செயலையும் செய்வதற்குத் துணிந்தார்.
அதாவது, பொருட்தேவைக்காக வழிப்பறி செய்ய ஆரம்பித்தார். அது எப்படிங்க,
ஒரு வைணவர், அதுவும் இறைவனிடமே பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டவர், அவர்
எப்படி வழிப்பறியெல்லாம் செய்வார் என்று நீங்க கேட்கறது எனக்குப்
புரியுது...
காரணமின்றி காரியமில்லை!! ஆனா, அவர் சிந்தை முழுதும்
முகுந்தனின் அடியவர்களுக்கு அன்னமிடுவதிலேயே மூழ்கி இருந்தது. என்ன காரியம்
செய்தாகிலும், எம்பிரானின் அடியவர்களுக்கு அழிபசி தீர்ப்பதில்தான் கவனம்
முழுதும் இருந்தபடியால், அவர் செய்வது சரியா? முறையா? என்று கூட சிந்தை
செய்யவில்லை.
ஆனா, நீங்க என்ன சொன்னாலும் தப்பு தப்புதான்?? வழிப்பறிங்கறது எவ்வளவு
பெரிய தப்பு.... விதிதான் அவர இப்படி எல்லாம் செய்ய வைக்குதுன்னா, விதியை
விதிக்கும் வித்தகன் இதை எல்லாம் பொறுமையா வேடிக்கையா பார்த்துக்
கொண்டிருந்தார்?? அவராவது வந்து தன் அடியவர்களுக்கு ஒருவர் தவறான வழியில்
அன்னமிடுகிறாரே, என்று அவருக்கு உதவலாம் இல்லையா???
ஆமாம் உதவலாம்...
என்ன ஆமாம் உதவலாம்..??? இறைவன் வந்தாரா? தடம் மாறிய தன்யனைக்
காப்பாற்றினாரா?
அமைதியா இருப்பா... ஆண்டவன் வருவான்... அருளுவான்.... அதற்கான காலம்
நேரம் வாய்க்க வேண்டாமா???
பாட்டும் அவனே... பாவமும் அவனே..... பாவமும் அவனே... பாவத்திற்கு
சம்பளமும் அவனே.... புண்ணியமும் அவனே.... புண்ணும் அவனே... புண்ணுக்கு
மருந்தும் அவனே... மருந்தும் அவனே.... விருந்தும் அவனே... எல்லாமும்
அவனே... எல்லாவற்றிலும் அவனே.... வினைக்கு வித்திடுபவனும் அவனே....
வினையும் அவனே.... வினையின் விளைவும் அவனே... வினையால் வீழ்த்துபவனும்
அவனே... வினையை வீழ்த்துபவனும் அவனே....
அத்தகையவனுக்குத் தெரியாதா?? எதை, எக்காலம் வரைக்கும் செய்ய வைக்க
வேண்டும் என்று??? எங்கு முடிச்சு போட வேண்டும், எந்த இடத்தில் முடிச்சியை
அவிழ்க்க வேண்டும் என்று...
முடிச்சியை அவிழ்க்கும் காலம் வந்தது... கருணை வெள்ளம் பொங்க
ஆரம்பித்தது; இறைவனும் இறைவியும் மணக்கோலம்பூண்டு, திருமங்கையிலுள்ள
திருமணங்கொல்லை என்னும் கானகத்தின் வழியே, திருமண ஊர்வலமாய், கல்யாண
கானங்கள் இசைக்க சென்று கொண்டிருந்தனர்.
ஏன் அவங்கல்லாம் அந்த பக்கமா போகனும்???
ஏன்னா, பரகாலனும் அவனது, பட்டாளங்களும் பதுங்கியிருக்கும் பகுதி அது...
கணக்கு வாத்தியார் போட்ட கணக்கு தப்பாகலாம், கமலக்கண்ணன் போட்ட கணக்கு
தப்பாகுமா??
பரகாலனும் அவனது கூட்டத்தினரும், திருமணக் கூட்டத்தை வழிமறித்து,
அங்கிருந்த அனைவரின் பொருட்களையும் கைப்பற்றினர், மணமக்களின் உடைமைகள்
உட்பட... எல்லாமும் கவர்ந்த பின்பும், கள்ளழகரின் காலில் ஒரு மெட்டி
மட்டும் மீதம் இருந்தது... மீதம் இருந்த மெட்டியையும் கழற்ற முயன்றார்,
நீலர். எவ்வளவு முயன்றும் இயலவில்லை அந்த காலனால், பர காலனால்.
எவ்வளவு முயன்றும் அவர் முயற்சி தோல்வியில் முடிந்தது. சரியென்று,
அவர்கள் அந்த மெட்டியை விட்டு விட்டு, மற்ற உடைமை கள் அனைத்தையும்
மூட்டையில் கட்டித் தூக்க முயன்றனர். ஆனால், அந்த முயற்சியும் வீணாய்
போனது... எவ்வளவு முயன்றும் அவர்களால் முடியவில்லை. ஆனால் முடிந்தது...
பரகாலனின், பாவகாலம் முடிந்தது.
அதாவது, முடிவடையும் நேரம் வந்தது... உடனே கோபம் கொண்ட பரகாலன், 'ஏய்!
நீ ஏதோ மந்திரம் செய்து விட்டாய் அதனால் தான், என்னால் கழற்றவும்
இயலவில்லை, கவர்ந்ததைக் கொள்ளவும் முடியவில்லை. என்ன மாயம் செய்தாய், என்ன
மந்திரம் செய்தாய், உண்மையை சொல்' என்று ஆத்திரத்துடன் கல்யாண
மாப்பிள்ளையிடம் கத்தியை நீட்டி மிரட்டினார்.
உடனே, மாதவனின், மந்தகாசம் சிந்தும் முகத்தில் தவழ்ந்த மந்திர
புன்னகையுடன், நம் கலியா! என்னும் பெயரிட்டு, 'நம்கலியா, வா, என் அருகில்
வா, உனக்கு நான் அந்த மந்திரத்தை சொல்கிறேன்,' என்று அருகில் அழைத்து, நம்
கலியனின் காதிலே,
தீயவற்றிற்கு எட்டாத, தின்னத் தின்னத் தெவிட்டாத தேனினும் இனியதாய,
நூற்றெட்டு திருத்தலத்தின் தலைவனின், பாவங்களனைத்தையும் வெட்டுபவனின் பெயர்
கொண்ட அந்த எட்டெழுத்து மந்திரத்தை நம்கலியனின் காதிலே பக்குவமாய் "ஓம்
நமோ நாராயணா" என்று ஓத நம் கலியனின் கர்மங்கள் அனைத்தும் கழிந்தன.
எம்பெருமான், பெரிய பிராட்டியுடன் கருட வாகனத்தில் இருந்து அவருக்கு
அருள் பாலித்துவிட்டு மறைந்தார். இல்லை, இல்லை... நம் கலியன் அந்த இறைவனைத்
தனக்குள்ளே ஆழ்த்திக் கொண்டார், தானும் அந்த இறைவனுக்குள்ளே ஆழ்ந்தார்.
அந்த கணமே, நம் கலியனுக்குள்ளே, கட்டுண்டு கிடந்த கருணை வெள்ளம் கரையை
உடைத்து அகிலமெல்லாம் பாய ஆரம்பித்தது. இறைவன் மீதான அன்பும், பக்தியும்
மடைதிறந்த வெள்ளமென பாசுரங்களாய் பெருக்கெடுத்தது. ஆழ்வாரின் மீதான
ஆண்டவனின் அருள், ஆழ்வாரின் மனத்திற்குள்ளிருந்து உடைந்து கண் வழியே
கண்ணீராய், திருவாய் வழியே திவ்யமொழிகளாய் வெளிப்பட்டது.
அதுமுதல், இறைவன் இருக்கும் திருத்தலங்களுக்கெல்லாம் சென்று அவரது
அருள்கடலிலே ஆழ்ந்து, ஆழமான கருத்துடைய பாடல்களைப் பாடிப் பாடி பரவசம்
கொண்டார்.
எப்படி, வில்லும் வாளும் ஏந்திய வீரனின் வாயில் பக்திமயம் பொங்கும்
கானங்களா??? ஆமாம் பா ஆமாம்.... ஏன் சந்தேகமா??? அவர் இன்னும் பழைய பரகாலன்
இல்ல, புதிய நம் கலியன், திருமங்கையாழ்வார்... அவர் பாடாமல், பின் எவரால்
பாட இயலும்?? அதுவும், அவர் பாடின பாடல்கள் ஒன்றா? இரண்டா??
திருமங்கையாழ்வாரின் அருள் ஆக்கங்கள்:
பெரிய திருமொழி 1084
குறுந்தாண்டகம் 20
நெடுந்தாண்டகம் 30
திருவெழுக்கூற்றிருக்கை
1
சிறிய திருமடல் 40
பெரிய திருமடல் 78.
இப்போ புரியுதுங்களா?? ஆவதும் பெண்ணாலே... அழிவதும் பெண்ணாலே... ஆம்,
நன்மைகள் ஆவதும் பெண்ணாலே, தீமைகள் அழிவதும் பெண்ணாலே.... துணைவியுடன்
இருந்து அருள் பாலிக்கும் ஒரே ஆழ்வார், திருமங்கையாழ்வார்தான்.
நாற்கவி:
1. ஆசுகவி - உடனுக்குடன் பாடுவது
2. சித்திரக்கவி - பாடலும், பாடலின்
பொருளும் சித்திர அலங்காரமாய் அமைய பாடுவது
3. விஸ்த்தாரக்கவி -
விஸ்த்தாரமாக, விரிவாகப் பாடுவது
4. மதுரகவி - இசை நயத்துடன் பாடுவது
இந்த நான்கு வகை கவிகளிலும், திருமங்கையாழ்வார் திறமையானவராக
இருந்ததால், அவரைப் பாராட்டி திருஞான சம்பந்தர் அவர்கள் அவருக்கு 'நாலு கவி
பெருமாள்' என்று பட்டமளித்து தன் வேலையும் அவருக்குப் பரிசாக அளித்தார்.
ஓம் நமோ நாராயணாய நம!!
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!

http://www.tamil-temples.com/ALDetails.asp?id=15

Admin
Admin

Posts : 48
Join date : 20/06/2010

https://mukkulam.ace.st

Back to top Go down

Thirumangai mannan Empty Re: Thirumangai mannan

Post  Admin Thu Jul 08, 2010 8:53 am

ஏடு, எழுத்தாணி பெருமாள்: திருமங்கையாழ்வார் ஸ்ரீ ரங்கம்
ரங்கநாதர் கோயிலை திருப்பணி செய்தபோது அவர் வைத்திருந்த பணம் அனைத்தும்
செலவாகிவிட்டது. பணியாளர் களுக்கு கூலி கொடுக்கக்கூட அவரிடம் பணமில்லை.
எனவே, தனக்கு பணஉதவி செய்யும்படி பெருமாளை வேண்டினார். அவருக்கு அசரீரியாக
ஒலித்த பெருமாள், கொள்ளிடம் ஆற்றின் கரையில் ஒரு இடத்தை சுட்டிக்காட்டி
அங்கு வந்தால் பணம் தருவதாக சொன்னார். திருமங்கையாழ் வாரும் அங்கு
சென்றார். அப்போது வணிகர் ஒருவர் தலைப்பாகை அணிந்து கொண்டு, கையில்
மரக்கால், ஏடு மற்றும் எழுத்தாணியுடன் அங்கு வந்தார். அவர்
திருமங்கையாழ்வாரிடம், "உங்களுக்கு உதவி செய்ய ரங்கநாதன் என்னை அனுப்பி
வைத்தான். என்ன வேண்டுமென கேளுங்கள்' என்றார். திருமங்கை அவரிடம் பணம்
கேட்டார்.
தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லிய வணிகர் தான் வைத்திருந்த மரக்காலைக்
காட்டி ""இம்மரக்கால் கேட்டதைத் கொடுக்கக்கூடியது. ரங்கநாதனை வேண்டி
உங்களுக்கு என்ன வேண்டுமோ அதைக்கேட்டால் இம்மரக்கால் கொடுக்கும்'' என்றார்.
திருமங்கையாழ்வார் பணியாளர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும் என்றார்.
அப்போது வணிகர், "மரக்காலில் தான் பணியாளர்களுக்கு மணலை அளந்து
தருவதாகவும், உண்மையாக உழைத்தவர்களுக்கு மட்டும் அம்மணல் பொன்னாகவும்,
ஏமாற்றியவர்களுக்கு அது மணலாகவுமே இருக்கும்' என்றார்.திருமங்கையாழ்வாரும்
சரியென ஒப்புக்கொள்ள நிறைய பேருக்கு மணலாகவே இருந்தது. கோபம்கொண்ட
பணியாளர்கள் வந்திருப்பவன் தந்திரக்காரன் என எண்ணி அவரை அடிக்க பாய்ந்தனர்.
வணிகர் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடினார். திருமங்கையாழ்வார் அவரை
பின் தொடர்ந்து ஓடினார். நீண்ட தூரம் ஓடி வந்த வணிகர் இத்தலத்தில்
நின்றார். அவரிடம் திருமங்கையாழ்வார் "நீங்கள் யார்? எதற்காக எனக்கு உதவி
செய்வதாக சொல்லி ஏமாற்றினீர்கள்?' என்றார். மகாவிஷ்ணு, வணிகனாக வந்து
அருளியது தானே என உணர்த்தி அவருக்கு காட்சியளித்தார். ஏட்டில்,
எழுத்தாணியால் எழுதி அவருக்கு உபதேசமும் செய்தார்.

படியளக்கும் சுவாமி: கருவறையில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன்
நாபிக்கமலத்தில் பிரம்மாவுடன் பள்ளிகொண்ட கோலத்தில் இருக்கிறார். இவர்
மரக்காலை தலைக்கு வைத்து, இடது கையில் எழுத்தாணி, ஏடுடன் காட்சி தருகிறார்.
இதனை உலகுக்கு படியளந்த பெருமாள் ஓய்வாக பள்ளிகொண்டிருக்கும் கோலம் எனவும்
சொல்கிறார்கள். காமதேனு சுவாமியின் பாதத்திற்கு அருகில் அவரை வணங்கியபடி
இருக்கிறாள். சிவன், பிரம்மாவின் ஒரு தலையை எடுக்க அந்த தலை அவரது கையுடனே
ஒட்டிக்கொண்டது. சிவனால் தலையை தனியே எடுக்க முடியவில்லை. எனவே அந்த தலையை
எரிக்கும்படி அக்னிபகவானிடம் கேட்டுக் கொண்டார் சிவன். அக்னி எவ்வளவோ
முயன்றும் அவராலும் தலையை எரிக்க முடியாமல் போனதோடு பிரம்மஹத்தி தோஷமும்
பிடித்துக்கொண்டது. அவர் இங்கு பெருமாளை வணங்கி சாபம் நீங்கப்பெற்றார்.
இவர் கருவறையில் சுவாமியின் பாதத்திற்கு அருகில் இருக்கிறார். அருகில்
பிருகு மகரிஷி, திருமங்கையாழ்வார் ஆகியோரும் இருக்கின்றனர்.

மோட்சம் தரும் தூண்கள்: பரமபதத்தில் இருக்கும் மகாவிஷ்ணுவிற்கு முன்புறம்
இரண்டு தூண்கள் இருக்கும். ஜீவன்கள் மேலே செல்லும்போது, இந்த தூண்களைத்
தழுவிக் கொண்டால் பாவங்களில் இருந்து விடுபட்டு மோட்சம் கிடைக்கும்.
அதேபோல் இத்தலத்தில் கருவறைக்கு முன்புறம் அர்த்தமண்டபத்தில் சுவாமியின்
பாதம், தலைக்கு நேரே இரண்டு தூண்கள் இருக்கிறது. இரட்டைப்படை எண்ணிக்கையில்
வலம் வந்து இந்த தூண்களை பிடித்துக்கொண்டு சுவாமியின் திருமுகம் மற்றும்
திருப்பாதத்தை தரிசனம் செய்தால் மோட்சம் கிடைக்கும்
என்பதும்,திருமணமாகாதவர்கள் தூண்களை தழுவி வணங் கினால் அப்பாக்கியம்
கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. 108 திவ்யதேசங்களில் இங்கும்,
ஸ்ரீரங்கத்திலும் இந்த தூண்கள் இருக்கிறது.
http://temple.dinamalar.com/New.aspx?id=345

Admin
Admin

Posts : 48
Join date : 20/06/2010

https://mukkulam.ace.st

Back to top Go down

Thirumangai mannan Empty Re: Thirumangai mannan

Post  Admin Thu Jul 08, 2010 9:05 am

திருவாலி


பகவானை நரசிம்ம அவதாரமாக காண விரும்புவோர்க்கு அமைந்த இடம்
சீர்காழியிலிருந்து தென் கிழக்கே 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவாலி
திருநகரியுள்ள பெருமாள் கோயில்தான்.


இந்த ஸ்தலத்திற்கு ஆவிநாடு, பில்வாரண்யம் என்று வேறு பெயர்களும் உண்டு.
மூலவர் லஷ்மி நரசிம்மர், லெஷ்மியை வலது பாகத்தில் தழுவிக் கொண்டு தரிசனம்
தருகிறார். உற்சவர் திருவாலி நகராளன், தாயார் அம்ருதகடவல்லி, தீர்த்தம்
இலாஷணி புஷ்கரணி, விமானம் அஷ்டாக்ஷர விமானம். இன்னொரு கோயில் திருநகரி
இரண்டும் தனித்தனியாக இருந்தாலும் ஆழ்வார்கள் ஒரே திவ்யத் தேசமாக மங்களா
சாசனம் செய்திருக்கிறார்கள்.


பஞ்ச லெஷ்மி நரசிம்ம க்ஷேத்திரத்தில் இதுவும் ஒன்று. இரண்யனை வதம்
செய்து சீற்றம் அடங்காமல் இருப்பதைக் கண்டு தேவர்களும் முனிவர்களும்
திருமகளிடம் வேண்டியதால் பெருமாளின் சீற்றம் தணிக்க, பிராட்டியார்
எம்பெருமானின் வலது தொடையில் வந்து அமர்ந்தார். இறைவனது சீற்றமும்
அடங்கியது. தன் தொடையில் வந்தமர்ந்த தேவியை இறைவன் ஆலிங்கனம் செய்து
கொண்ட திருக்கோலம் இந்த கோயிலில் காணப்படுகிறது. திருமங்கையாழ்வார் சூலி
நாட்டை தலைநகராகக் கொண்டு திகழ்ந்தார். எனவேதான் ஆழ்வாருக்கு ஆவிநாடான்
என்ற பெயர். திருமங்கையாழ்வாரின் மனைவி வளர்ந்த இடம் என்ற பெருமையும்
உண்டு.


இறைவன் திருமகளை மணந்து கொண்டு அருகிலுள்ள திருநகரிக்கு வந்து
கொண்டிருக்கும் பொழுது 'வேதராஜபுரம்' என்னுமிடத்தில் வழிமறைத்து
பெருமாளிடம் வழிப்பறிச் செய்தார் திருமங்கையாழ்வார். பிறகு வந்திருப்பது
பெருமாள் என்பதை உணர்ந்து வருந்த பெருமாள் திருமங்கையாழ்வாரை மன்னித்து
உபதேசம் செய்த இடமும் இங்குதான் உள்ளது. இன்றைக்கும் அதனை நினைவுபடுத்துகிற
வகையில் பங்குனி மாதம் உத்திரம் முதல் நாள் இரவு, வேடுபறி உற்சவம்
நடக்கிறது.


பரிகாரம் : குடும்ப மனக்கஷ்டம் உள்ளவர்கள் செய்கின்ற பணியில் பல்வேறு
இடையூறுகளைச் சந்தித்து நிம்மதி இல்லாமல் தவிப்பவர்கள் எதிரிகளின் ஆவேசத்
தாக்குதலால் தினமும் அவதிப்படுபவர்கள், வாழ்க்கையில் முன்னேற முடியாமல்
பலரது முட்டுக்கட்டைகளால் மனம் நொந்து கொண்டிருப்பவர்கள் கடன்
தொல்லையால் அவதிப்படுபவர்கள், திருமண வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல்
இருப்பவர்கள், பில்லி, சூன்யம், ஏவல் போன்ற துர்தேவதைகளால் மாட்டிக்
கொண்டு முழிப்பவர்கள் இந்த திருவாலியிலுள்ள பெருமாளை தரிசனம் செய்து
பிரார்த்தனை செய்து கொண்டால் அத்தனைக் கஷ்டங்களும் அடியோடு விலகும்.


திருநகரி


திருமங்கையாழ்வாருக்கும் பகவான் சோதனை செய்து பின்னர் குருவாக மாறி
மந்த்ர உபதேசம் செய்த புனிதமான கோயில் திருநகரி. இது சீர்காழிக்கு கிழக்கே
7 கி.மீ தொலைவில் உள்ளது.


லெட்சுமிபுரம் : வில்வாரண்யம் என்று திருநகரிக்கு வேறு பெயர்கள் உண்டு.
புராணங்களில் ஆலிங்கனபுரம் ஸ்ரீநகரி, விக்னேஸ்வர நல்லூர்
என்றிருக்கின்றது. உப்பனாற்றின் தென்கரையில் மூன்றரை ஏக்கர் நிலப்பரப்பில்
உள்ள கோயில். மூலவர் வேதராஜன், திருமகள் பூமி தேவியுடன் மேற்கு நோக்கி
வீற்றிருக்கிறார். 5 பிரகாரங்கள் ஏழு நிலை, ஐந்து நிலை, மூன்று நிலை என்று
கோபுரங்கள் இருக்கின்றன. உற்சவர் கல்யாண ரங்கநாதப் பெருமாள். தாயார்
அம்ருதவல்லி இறைவன் கல்யாண கோலத்தில் திருமங்கையாழ்வாருக்கு காட்சி
கொடுத்த ஸ்தலம்.


திடீரென்று காணாமல் போன திருமாளைத் தேடி எங்கும் அலைந்தும் காணாமல்,
கடைசியில் இத்தலத்திலுள்ள புஷ்கரணியிலுள்ள தாமரை மலருக்குள் மறைந்திருந்த
திருமகளைக் கண்டு திருமால் ஆலிங்கனம் செய்து கொண்டார். திருமங்கையாழ்வார்
அவதரித்த கோயில். பஞ்ச நரசிம்ம மூர்த்திகளில் இரண்டு மூர்த்திகள்
இங்குண்டு. பெருமாள், திருஞான சம்பந்தரை வாதத்தில் வென்று அவரிடம் பெற்ற
வேலோடு வேடனைப் போன்ற தோற்றத்தில் தாயார் குமுதவல்லியுடன்
காட்சியளிக்கிறார். திருநாங்கூர் 11 கருட சேவைக்காக திருநகரிலிருந்து
திருமங்கையாழ்வார் புறப்பட்டுச் செல்வார். குலசேகராழ்வார்,
திருமங்கையாழ்வார் இராமானுஜர், ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஆகியோர் இந்தக்
கோயிலுக்கு மங்களா சாசனம் செய்திருக்கிறார்கள். பங்குனி மாதம் 10 நாட்கள்
பிர்மமோற்சவம் நடைபெறும்.


பரிகாரம் : வாழ்க்கையில் நிறைய சோதனைகளைப் பெற்றுக்
கொண்டிருப்பவர்களும் பெருமாளின் திவ்ய தரிசனம் தனக்கு எப்படியாவது கிடைக்க
வேண்டும் என்று துடிப்பவர்களும் தெரிந்தோ தெரியாமலோ பொன்னை இழந்து
பொருளை இழந்து வாடுபவர்களும் குடும்பத்தில் ஒற்றுமை குலைந்து மனவேதனைப்
பெற்றுக் கொண்டிருப்பவர்களும் குழந்தைகள் மூலம், பெற்றோர் மூலம்
மனக்கஷ்டம் அடைந்து அதிலிருந்து மீள முடியாமல் அவதிப்படுபவர்களும்
பெருமாளுக்கு இங்கு வந்து கல்யாண உற்சவம் செய்து பெருமாளை சரண் அடைந்தால்
இக்கட்டான நிலையிலிருந்து விரைவில் மீண்டு விடலாம்.

http://www.thiruthalam.com/temple_detail.php?id=192

Admin
Admin

Posts : 48
Join date : 20/06/2010

https://mukkulam.ace.st

Back to top Go down

Thirumangai mannan Empty Re: Thirumangai mannan

Post  Admin Thu Jul 08, 2010 9:15 am

சத்கீர்த்திவர்த்தனன்

சத்க்கீர்த்திவர்த்தனன் என்ற அரசன்
மகப்பேறில்லாத குதைறயை நீக்க இவ்விடத்தில் தவம் செய்து புத்திரனை அடைந்த
சந்தோஷத்தினால் ஐந்து கலசங்களுடைய உத்தியோக விமானத்தையும் ,மண்டபங்களையும்,
பிரகாரங்களையும் அமைத்து சித்திரை பூர்ணிமையில் இரதோற்சவம் ஏற்பாடு செய்து
நெடுங்காமல் இத்தலத்தில் வசித்து மோக்ஷமடைந்தான்.
திருமங்கையாழ்வாரும்
இத்தலத்தில் தங்கி ஸ்ரீரங்கநாதருக்கு விமானம், கோபுரம்,பிரகாரங்கள்
முதலிய திருப்பணிகள் செய்ததாக தெரிகிறது. இதற்கு அறிகுறியாக கதம்ப
புஷ்கரணிக்கு வடபாகத்தில் நன்செய்நிலமும், அதையடுத்த தோப்பும் மண்டபமும்
ஆழ்வார் தங்கியிருந்ததால் "ஆழ்வார் பட்டவர்த்தி' என்ற பெயருடன் இன்றும்
விளங்குகின்றன.
இக்கோயில் பற்றி மேலும் அறிய 04312591466,2591405
என்றஎண்ணில்தொடர்பு கொள்ளவும்.
http://vgselva.blogspot.com/

Admin
Admin

Posts : 48
Join date : 20/06/2010

https://mukkulam.ace.st

Back to top Go down

Thirumangai mannan Empty Re: Thirumangai mannan

Post  Admin Thu Jul 08, 2010 9:26 am

"உலகத்தில் தருமம் அழிந்து, அதர்மம் ஓங்குகிற சமயம், நான் உலகத்தில் அவதாரம் எடுக்கின்றேன் என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் கூறுகிறார். உலக உயிர்களுக்கு இறைவன் தன் கருணையால் இன்பம் ஊட்டுவதற்கே அவதாரங்களை இறைவன் எடுக்கிறார். அதனடிப்படையில் ஸ்ரீரங்கம் கோயில் ராஜகோபுரம், திருமதில்சுவர் உட்பட கோயில் கட்டுமானப்பணிகளை திருமங்கையாழ்வார் முன்னின்று நடத்தினார். அவருடைய பணியை பாராட்டி ரெங்கநாதர் திருமங்கையாழ்வாரின் கோரிக்கையை ஏற்று, பத்து அவதாரத்தில் (தசாவதாரம்) திருமங்கையாழ்வாருக்கு காட்சியளித்த இடம் கொள்ளிடம் ஆற்றங்கரையிலுள்ள தசாவதாரம் கோயிலாகும்.
http://temple.dinamalar.com/New.aspx?id=1159

Admin
Admin

Posts : 48
Join date : 20/06/2010

https://mukkulam.ace.st

Back to top Go down

Thirumangai mannan Empty Re: Thirumangai mannan

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum