முக்குலம்


Join the forum, it's quick and easy

முக்குலம்
முக்குலம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

புட்டோவை தூக்கில் போட்ட ஜியாவின் நிலை

Go down

புட்டோவை தூக்கில் போட்ட ஜியாவின் நிலை Empty புட்டோவை தூக்கில் போட்ட ஜியாவின் நிலை

Post  Admin Tue Jun 22, 2010 6:19 am

நடுவானத்தில் விமானம் வெடித்துச் சிதறியதால், பாகிஸ்தான் அதிபர் ஜியா_வுல்_ஹக் அடையாளம் தெரியாதபடி உடல் சிதைந்து மரணம் அடைந்தார். ராணுவ தளபதியாக இருந்து, புரட்சி நடத்தி பாகிஸ்தான் அதிபர் ஆனவர் ஜியா. 64 வயதான அவர் 11 ஆண்டுகளாக அதிபராக பதவியில் நீடித்தார்.

ஜியா இரும்பு மனம் படைத்தவர். பூட்டோ பாகிஸ்தானின் பிரதமராக இருந்தபோது அவரால் ஜியா தளபதியாக நியமிக்கப்பட்டார். ஆனால் நன்றி மறந்த ஜியா 1977_ம் ஆண்டில் ராணுவ புரட்சி நடத்தி, பிரதமராக இருந்த பூட்டோவை சிறையில் அடைத்து விட்டு, ஆட்சியை கைப்பற்றினார். பின்னர் 1979_ல் பூட்டோவை தூக்கிலிட்டார்.

தொடர்ந்து அதிபர் பதவியில் நீடித்து வந்த ஜியா, 17_8_1988 அன்று பாகிஸ்தானில் மூல்தான் நகருக்கு அருகேயுள்ள ராணுவ முகாமை பார்வையிடச் சென்றார். அவருடன் அமெரிக்க தூதர் ரபீல், முதன்மை ராணுவ தளபதி அக்தர் அப்துல் ரகிமான் மற்றும் உயர் ராணுவ அதிகாரிகளும் சென்றார்கள்.

முகாமை பார்வையிட்டபின் விமானத்தில் புறப்பட்டனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பகவல்பூர் என்ற இடத்துக்கு அருகே நடுவானத்தில் தீப்பிடித்து, வெடித்து சிதறி விழுந்தது. இந்த விபத்தில் ஜியாவும், அமெரிக்க தூதரும் ராணுவத் தளபதியும், மற்ற அதிகாரிகளும் பலி யானார்கள். விபத்து பிற்பகல் 3 மணி அளவில் நடந்தது.

ஜியா சென்ற விமானத்தில் மொத்தம் 30 பேர் இருந்தார்கள். அனைவருமே விபத்தில் உயிர் இழந்து விட்டனர். விபத்து நடந்த இடம் தலைநகர் இஸ்லாமாபாத் துக்கு தென்மேற்கே 480 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. ஜியா மரணம் அடைந்ததை தொடர்ந்து புதிய அதிபராக குலாம் இஷாக்கான் பதவி ஏற்றுக்கொண்டார்.

ஜியா சென்ற விமானத்தின் நொறுங்கிய பாகங்கள் வெகு தூரம் சிதறிக் கிடந்தன. அவற்றை ராணுவத்தினர் சேகரித்தனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து 11 உடல்கள் மீட்கப்பட்டன. இதில் ஜியா, அமெரிக்க தூதர் ரபீல் ஆகியோர் உள்பட 4 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டன.

உடல்கள் உருக்குலைந்து போய்விட்டன என்றாலும் உடல்கள் அருகே கிடந்த மெடல்கள் மற்றும் பதவிக்கு உரிய அடையாளச் சின்னங்கள் ஆகியவற்றைக்கொண்டு தான் அடையாளம் கண்டுபிடிக்க முடிந்தது. அமெரிக்க தூதர் உடல், தனி விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஜியா விமானத்தில் பயணம் செய்தபோது முஸ் லிம்களின் புனித நூலான குரானை வைத்திருந்தார். விபத்து நடந்த இடத்தில் அந்த குரான் புத்தகம் கண்டுபிடிக்கப்பட்டது. அதை பத்திரமாக எடுத்து சென்றனர். ஜியா உடலை ஒரு மரப்பெட்டியில் வைத்து விமானம் மூலம் ராவல் பிண்டி நகருக்கு கொண்டு போனார்கள். அங்குள்ள அதிபர் மாளிகையில் ஜியா உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. உறவினர்களும் மற்றும் பொது மக்களும் இறுதி மரியாதை செலுத்தினர்.

பின்னர் ஜியா உடல் அங்கிருந்து பீரங்கி வண்டியில் ஏற்றப் பட்டு பைசால் மசூதிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. (இந்த மசூதி உலகிலேயே பெரிய மசூதியாகும்) ஜியா உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டி மீது பாகிஸ்தான் கொடி போர்த்தப்பட்டு இருந்தது. பீரங்கி வண்டி மெதுவாக செல்ல பாகிஸ்தான் முப்படை தளபதிகளும் பின்னால் நடந்து சென்றார்கள்.

பீரங்கி வண்டியில் இருந்து ஜியா உடல் இருந்த பெட்டியை ஜியாவின் 2 மகன்கள், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் முகமதுகான் ஜ×னேஜோ மற்றும் ராணுவ அதிகாரிகள் சுமந்து வந்து புதைகுழி அருகே வைத்தனர். ஜியாவின் உடல் உருக்குலைந்த நிலையில் இருந்ததால் பெட்டியை திறக்காமலேயே வைத்து இருந்தனர். ஜியா முகத்தை யாருக்கும் காட்டவில்லை.

சவக்குழி அருகே வைக்கப்பட்டிருந்த ஜியா உடலுக்கு ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். பிரதமர் ராஜீவ் காந்தி சார்பில் வெளிநாட்டு இலாகா மந்திரி நரசிம்மராவ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

வங்காளதேச அதிபர் எர்ஷாத், ஈரான் ஜனாதிபதி அலி காமேனி, துருக்கி அதிபர் கெனான், எவரான் பிரதமர் துர்காத் ஓஜால் ஆகியோர் உள்பட 70 நாட்டு தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் தூதர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். வெளிநாட்டுத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி முடித்ததும், "குரான்" ஓதுவது போன்ற மற்ற இறுதிச் சடங்குகள் நடந்தன. அதைத் தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க, ராணுவ மரியாதையுடன் ஜியா உடல் அடக்கம் செய்யப்பட்டது.

ஜியா 1924_ம் ஆண்டு ஆகஸ்டு 12_ந்தேதி ஜலந்தர் நகரில் பிறந்தார். (இப்போது அந்த நகரம் பஞ்சாபில் உள்ளது.) இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றாக இருந்த போது, டேராடூனில் உள்ள ராணுவ பள்ளியில் படித்து பயிற்சி பெற்று குதிரைப்படை அதிகாரியானார்.

பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்து சென்றபிறகு, பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்து கவசப்படை தளபதியாக பணியாற்றினார். 1971_ம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமராக பூட்டோ பதவி ஏற்றதைத் தொடர்ந்து, ஜியாவை தனது பாதுகாப்பு அதிகாரியாக நியமித்தார். பிறகு 1976_ம் ஆண்டு ராணுவ தளபதியாக ஆக்கப்பட்டார். ஒரே ஆண்டில் ராணுவ புரட்சி செய்து அதிபரானார். பூட்டோவை தூக்கிலிட்டார்.

பாகிஸ்தானின் சர்வாதிகாரியாக 11 ஆண்டுகள் இருந்தார். அவரது ஆட்சியில் அவரை எதிர்த்து யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. அரசியலில் தன்னை எதிர்த்தவர்களையெல்லாம் முறியடித்து வந்த ஜியாவின் வாழ்க்கை விமான விபத்தில் முடிந்துவிட்டது. ஜியா மனைவி பெயர் ஷாபிகா. 2 மகன்களும், மகள்களும் இருந்தார்கள்.

அதிபர் ஜியா சென்ற விமானம் வெடித்துச் சிதறியது எப்படி என்பது பற்றி முரண்பட்ட தகவல்கள் வெளிவந்தன. ஏவுகணை (ராக்கெட்) தாக்குதலால் விமானம் வெடித்து சிதறி இருக்கலாம் என்றும் அல்லது ஹெலிகாப்டர் விமானம் மோதியதால் நொறுங்கி இருக்கலாம் என்றும் முதலில் கூறப்பட்டது.

ஆனால் பிறகு விமான விபத்துக்கு நாசவேலையே காரணம் என்று கூறப்பட்டது. இதுபற்றிய விசாரணை அறிக்கை புதிய அதிபர் இஷாக்கானிடம் கொடுக்கப்பட்டது. "ஜியா விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு தரையில் இருந்து "ரிமோட் கண்ட்ரோல்" கருவியை இயக்கி, வெடிகுண்டை வெடிக்கச் செய்து இருக்கிறார்கள்" என்று, நிபுணர்கள் கண்டுபிடித்தனர்.

ஜியா விமானம் புறப்படுவதற்கு முன், ஜியாவுக்கும், மற்றவர்களுக்கும் அன்பளிப்பாக சில மாம்பழக்கூடைகள் விமானத்தில் ஏற்றப்பட்டன. அந்த மாம்பழக் கூடைக்குள் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டு இருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது.

ராணுவத்தினரின் ஒத்துழைப்புடன்தான் இந்த நாசவேலை நடந்து இருக்கவேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்து இருந்தனர். ஜியாவை பிடிக்காத ராணுவ அதிகாரிகள் சதி செய்து விமானத்துக்கு வெடிவைத்து இருக்கிறார்கள் என்று அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்தனர்.

Admin
Admin

Posts : 48
Join date : 20/06/2010

https://mukkulam.ace.st

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum