விடுதலைபுலி அமைதி ஒப்பந்தம்
2 posters
விடுதலைபுலி அமைதி ஒப்பந்தம்
ராஜீவ் காந்தி _ ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இலங்கையில் அமைதியை நிலை நாட்ட "இந்திய அமைதிப்படை" சென்றது. 2 கப்பல்களில் இந்திய ராணுவத்தினர், கொழும்பு போய்ச் சேர்ந்தார்கள். விமானங்களிலும் ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆனால் அமைதிப்படையின் பணி எளிதாக இருக்கவில்லை. ஆயுதங்களை ஒப்படைக்க விடுதலைப்புலிகள் மறுத்தனர். அப்போது பிரபாகரன் டெல்லியில் இருந்தார். அவர் இலங்கைக்குத் திரும்பிய பிறகுதான் ஆயுதங்களை ஒப்படைப்பது பற்றி முடிவு செய்வோம் என்று அறிவித்தனர். இலங்கை சென்ற இந்திய அமைதிப்படையினருக்கு சில இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டபோதிலும் சில இடங்களில் எதிர்ப்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
ராஜீவ் காந்தியுடன் பேச்சு நடத்த டெல்லி சென்றிருந்த பிரபாகரன் அங்கே காவலில் வைக்கப்பட்டு இருப்பதாகவும், அவர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால்தான் ஆயுதங்களை ஒப்படைப்பது பற்றி எந்த முடிவுக்கும் வரமுடியும் என்று விடுதலைப்புலிகள் அறிவித்தனர். பிரபாகரன் என்ன ஆனார் என்பதே மர்மமாக இருந்தது. திடீரென்று பிரபாகரன் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆரை ராமாவரம் தோட்டத்தில் சந்தித்தார். இருவரும் 45 நிமிட நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். பின்னர் இந்திய விமானப்படை விமானம் மூலம் பிரபாகரன் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். யாழ்ப்பாணம் சென்றடைந்த பிரபாகரன் தனது தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆயுதங்களை விடுதலைப்புலிகள் ஒப்படைப்பதற்கு "கெடு" விதிக்கப்பட்டிருந்தது. அந்த கெடு முடிவடையும் நாள் நெருங்கிக் கொண்டிருந்ததால் ராஜீவ் காந்திக்கு பிரபாகரன் ஒரு செய்தி அனுப்பினார். "திரிகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டு பேச்சு நடத்தி வருகிறேன். எனது முடிவை யாழ்ப்பாணத்தில் நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்தில் அறிவிக்க இருக்கிறேன். எனவே அதுவரை கெடுவை நீடிக்கவேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
உடனே ராஜீவ் காந்தி, இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவுடன் தொடர்பு கொண்டு பேசினார். பிரபாகரன் கேட்டுக் கொண்டபடி, "கெடு" மூன்று நாட்களுக்கு நீடிக்கப்பட்டது. பிரபாகரன் அறிவித்தபடி யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகள் சார்பில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடந்தது. பிரபாகரன் சார்பில்விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் குழுவைச் சேர்ந்த யோகி இக்கூட்டத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
"இந்தியா _ இலங்கை ஒப்பந்தத்தின்படி ஆயுதங்களை ஒப்படைக்க சம்மதிக்கிறோம். இது எங்கள் பலவீனத்தைக் காட்டுவது ஆகாது. மக்களைக் காக்கவே ஆயுதம் ஏந்தினோம். மக்கள் நலனுக்காகவே இப்போது ஆயுதங்களை ஒப்படைக்க சம்மதிக்கிறோம்" என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.
பிறகு பிரபாகரன் பேசினார். "நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம். இந்தியாவுடன் போராட மாட்டோம். ஆகவேதான் ஆயுதங்களை ஒப்படைக்க சம்மதிக்கிறோம்" என்று அவர் குறிப்பிட்டார். இதைத்தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் உள்ள பலாய் என்ற விமானப்படை தளத்தில் ஆயுதங்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பிரபாகரன் வரவில்லை.
தனது பிரதிநிதிகளாக யோகி உள்பட 3 பேர்களை அனுப்பி வைத்தார். இந்திய ராணுவ தளபதி ஹர்கிரத்சிங், இலங்கை ராணுவ தளபதி சிரில் ரணதுங்கே ஆகியோரிடம், விடுதலைப்புலிகள் 4 வேன்களில் கொண்டு வந்த ஆயுதங்களை ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து, விடுதலைப் புலிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதாகவும், சிறையில் இருக்கும் 5 ஆயிரம் விடுதலைப்புலிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் இலங்கை அரசு அறிவித்தது.
இதன் பிறகு தமிழ்ப்பகுதிக்கு "இடைக்கால அரசு" அமைக்கப்பட்டது. இதில் சிங்களர்களும் இடம் பெற்றிருந்தார்கள். அதற்கு விடுதலைப்புலிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சமயத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் குழுவைச் சேர்ந்த தலைவர் திலீபன் ஒரு அறிக்கை வெளியிட்டார்.
"மன்னார், வவுனியா, திரிகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் ஆயுதம் இன்றி இருக்கும் விடுதலைப்புலிகள் கடத்தப்படுகிறார்கள். கொலை செய்யப்படுகிறார்கள். எனவே ஆயுதத்தை ஒப்படைப்பது பற்றி மறுபரிசீலனை செய்கிறோம்" என்று அதில் கூறப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து சமாதான ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் பின்னடைவு ஏற்பட்டது.
இலங்கை சிறையில் உள்ள விடுதலைப்புலிகளை விடுதலை செய்யவேண்டும் என்று கோரி திலீபன் உண்ணாவிரதம் இருந்தார். 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த அவர் மரணம் அடைந்தார். இதனால் தமிழ்ப்பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது. இலங்கை அருகே கடலில் சென்று கொண்டிருந்த 17 விடுதலைப் புலிகளை இலங்கை ராணுவம் கைது செய்தது. அந்த 17 பேர்களில், 15 பேர் "சயனைடு" விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து ராணுவத்தினர் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தினர். மீண்டும் போர் தொடங்கிவிட்டதாக பிரபாகரன் அறிவித்தார்.
விடுதலைப்புலிகளுக்கும், இந்திய அமைதிப்படையினருக்கும் மோதல்கள் நடந்தன. இதில் பலர் கொல்லப்பட்டனர். கலவரங்களுக்கு இடையே 1988 டிசம்பர் 19_ந்தேதி இலங்கையின் புதிய ஜனாதிபதி தேர்தல் நடந்தது. அதில் பிரேமதாசா வெற்றி பெற்றார். இலங்கையில் இருந்து அமைதிப்படையை வாபஸ் பெற்றுக்கொள்ளும்படி இந்திய அரசை பிரேமதாசா கேட்டுக்கொண்டார்.
அதன் பேரில் 1989 டிசம்பர் 31_ந்தேதிக்குள் இந்திய அமைதிப்படை முழுவதும் இலங்கையில் இருந்து வாபஸ் ஆகும் என்று இந்தியா அறிவித்தது. அதன்படி, இந்திய அமைதிப்படையினர் இந்தியாவுக்குத் திரும்பினர்.
ராஜீவ் காந்தியுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்தும், இந்திய அமைதிப்படை வருகை குறித்தும் ஆலோசிக்க, ஆளும் கட்சி "எம்.பி."க்களின் கூட்டத்தை இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா கூட்டினார்.
கொழும்பு நகரில், பாராளுமன்ற கட்டிடத்தில் உள்ள ஒரு அறையில் இக்கூட்டம் நடந்தது. இதில் ஜெயவர்த்தனா, பிரதமர் பிரேமதாசா, மந்திரிகள், "எம்.பி."க்கள் கலந்து கொண்டனர். கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது, வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் பிரதமர் பிரேமதாசா, பாதுகாப்பு மந்திரி அதுலத் முதலி, மற்றும் 7 மந்திரிகள், 15 "எம்.பி."க்கள் படுகாயம் அடைந்தனர். அதுலத் முதலியின் வயிற்றில் குண்டுகளின் துண்டுகள் பாய்ந்ததால் அவர் நிலை கவலைக்கிடமாக இருந்தது.
ஜெயவர்த்தனா மயிரிழையில் தப்பினார். காயம் அடைந்த மந்திரிகளில் கீர்த்தி சுப விக்ரமே மரணம் அடைந்தார். குண்டு வீசியவர்கள் ராஜீவ் காந்தி _ ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை எதிர்க்கும் சிங்கள தீவிரவாதிகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 8 சிங்களர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 4 பேர், பாராளுமன்றத்தில் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட போலீஸ்காரர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum